AstraZeneca தடுப்பூசிகளை பெறக்கூடியவர்களின் வயதெல்லை விஸ்தரிக்கப் பட்டுள் ளது NACI எனப்படும் நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இன்று இதுகுறி த்த அறிவித்தலை வெளியிட்டது.65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசிகள் முதலில் பரிந்துரைக்கப்படவில்லை.
ஆனாலும் தற்போது மேலதிக தரவுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் AstraZeneca தடுப்பூசிகளைப் பெறுவது பாதுகாப்பானது என இன்று அறிவிக்கப்பட்டது.இந்த விடயத்தில் நோய்த் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இன்று காலை அதன் பரிந்துரைகளை புதுப்பித்தது.
அதேவேளை AstraZeneca தடுப்பூசிகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ப தற்கான எந்த ஆதாரமும் இல்லை என கனடாவின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் Theresa Tam கூறினார்.