December 12, 2024
தேசியம்
செய்திகள்

June மாத இறுதிக்குள் 10 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கனடா பெற்றுக் கொள்ளும்

June மாத இறுதிக்குள் 10 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கனடா பெற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்படுகின்றது.

March மாத இறுதிக்குள் Moderna, 1.3 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பி வைக்கும் என நேற்று கனடிய பிரதமர் அறிவித்திருந்தார். இவற்றில் 4 இலட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் March 8ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்திலும் 8 இலட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசிகள் March 22ஆம் திகதி ஆரம்பமாகும்  வாரத்திலும் கனடாவை வந்தடையும் என அறிவிக்கப்பட்டது. இன்று Major General Dany Fortin இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

இதேவேளை March மாத இறுதிக்குள் Pfizer 4 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பி வைக்கும் என ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

January மாதம் உயர்ந்தது வருடாந்த பணவீக்கம்

Lankathas Pathmanathan

மத்திய பல் மருத்துவ திட்டத்திலிருந்து Alberta விலகல்

Lankathas Pathmanathan

Ontario, Quebec, Alberta, British Columbia ஆகிய மாகாணங்களில் Omicron தொற்றாளர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment