December 26, 2024
தேசியம்
செய்திகள்

Nunavut பிராந்தியத்தின் Arviat சமூகத்தில் அவசரகால நிலை

அதிகரித்து வரும் COVID தொற்று காரணமாக Nunavut பிராந்தியத்தின் Arviat சமூகம் அவசரகால நிலையை அறிவிக்கின்றது

சுமார் 2,800 பேரை மாத்திரம் கொண்ட இந்த சமூகத்தில் தற்போது 27 தொற்றுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 307 மொத்த தொற்றுகளுடன் Arviat சமூகம் முன்னர் Nunavut பிராந்தியத்தின்  மிகப்பெரிய COVID பரவல் கொண்ட இடமாக அடையாளம் காணப்பட்டது.

இன்று முதல், Arviat  சமூகம் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவின் கீழ் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் அமுலாக்கத்திற்காக நான்கு கூடுதல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர். ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என Arviat  நகர முதல்வர் தெரிவித்தார்

Related posts

முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது Blue Jays அணி

Hong Kong குடியிருப்பாளர்களுக்கான பணி அனுமதி திட்டத்தை விரிவுபடுத்தும் கனடிய அரசு

Lankathas Pathmanathan

Playoff தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட Blue Jays அணி

Lankathas Pathmanathan

Leave a Comment