தேசியம்
செய்திகள்

பாதியாகக் குறையும் கனடாவின் அடுத்த மாத Pfizer தடுப்பூசி ஏற்றுமதி

கனடாவின் அடுத்த மாதத்திற்கான Pfizer தடுப்பூசி ஏற்றுமதி பாதியாகக் குறைக்கப்படும் என தெரியவருகின்றது.

கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். Pfizerரிடமிருந்து தடுப்பூசிகளைப் பெறும் அனைத்து நாடுகளும் குறைவான அளவுகளைப் பெறுவார்கள் என அமைச்சர் ஆனந்த் கூறினார்.

அடுத்த மாதத்தில் கனடா தடுப்பூசி ஏற்றுமதியில் தற்காலிக தாமதத்தை எதிர்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. அடுத்த நான்கு வாரங்களுக்கு கனடாவின் விநியோகங்கள் பாதிக்கப்படும் என்பதை Pfizer உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 50 சதவீதம் தடுப்பூசி ஏற்றுமதி தாமதமாகவுள்ளது.

Pfizer ஐரோப்பிய உற்பத்தி நிலையத்தின் விரிவாக்க திட்டங்கள் காரணமாக இந்த தாமதம் எதிர்கொள்ளப்படவுள்ளது. இப்போது முதல் February மாத இறுதி வரை ஒவ்வொரு வாரமும் 124,800 முதல் 366,600 Pfizer தடுப்பூசிகளைப் பெற கனடா திட்டமிட்டிருந்தது.

Related posts

பொருளாதாரம், சுகாதாரம் ஆகியன முக்கிய இடம் பிடித்த கட்சி தலைவர்களின் விவாதம்

Meta தளங்களில் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்தி வைக்க கனடிய அரசு முடிவு

Lankathas Pathmanathan

நாடாளுமன்றத்தின் முன்பாக அரசு ஊழியர்கள் பேரணி

Lankathas Pathmanathan

Leave a Comment