COVID-19 தொற்றுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படும் என Health கனடா தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தயாரிப்பான Moderna தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படும் என Health கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் Supriya Sharma கூறினார். இந்தத் தடுப்பூசியை அங்கீகரிப்பது குறித்த முடிவெடுப்பதற்கு முன்னர் இன்னும் சில உற்பத்தி ஆவணங்கள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இரண்டு தடுப்பூசிகளின் தற்போதைய மதிப்புரைகள் குறைவாகவே உள்ளன. AstraZeneca தடுப்பூசி குறித்து Health கனடா ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும், Johnson & Johnson தடுப்பூசியின் மதிப்பாய்வு இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த ஒன்பதாம் திகதி Health கனடாவினால் Pfizer தடுப்பூசிக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. நேற்று (14) முதல் கனடாவில் இந்தத் தடுப்பூசி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.