Torontoவிற்கும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களுக்குமான சிறப்பு வானிலை அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (22) Torontoவில் 5 முதல் 10 cm பனிப்பொழிவு நிகழுமென வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. பனிப்பொழிவு Ontario ஏரிக்கு அருகிலுள்ள பகுதிகள் குறைவாக இருக்கும் எனவும் சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.

Torontoவை அண்மித்த Peel, Halton, York மற்றும் Durham ஆகிய பிற பகுதிகளும் இந்த சிறப்பு வானிலை அறிக்கையில் உள்ளடங்குகின்றன. இந்தப் பனிப்பொழிவு பயணங்களில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறிப்பிட்டுள்ள வானிலை அவதான நிலையம் பனிக்கால நிலைமைகளுக்கு ஏற்றவாறு வாகன ஓட்டுநர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு பனிப்பொழிவு குறையும் என சுற்றுச்சூழல் கனடா கூறியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை Torontoவில் அதிகூடிய வெப்ப நிலை 2 பாகை செல்சியசாகவும் குறைந்த வெப்ப நிலை -3 பாகை செல்சியசாகவும் உணரப்படும். திங்கட்கிழமை சூரிய ஒளியுடன் மேகக்கூட்டங்கள் கூடிய வானிலை Torontoவில் இருக்கும் எனவும் 40 சதவீத மழை பொழிவிக்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் வானிலை அவதான நிலையம்கூறியது. திங்கட்கிழமை அதிகூடிய வெப்ப நிலை 5 பாகை செல்சியசாக உணரப்படும்.