தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 19ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

இந்த உலகத் தொற்று நோய் வேளையில் கனேடியர்களைப் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதிலும், குடும்பங்கள் செலவினங்களை மேற்கொள்வதற்கு உதவியாக நடுத்தர வகுப்பு வேலைவாய்ப்புக்களைப் பாதுகாப்பதற்குப் பலமான நடவடிக்கைகளை எடுப்பதிலும், வணிக நிறுவனங்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளிலும் கனேடிய அரசு கவனம் செலுத்துகிறது.

உரிமையாளர்களே இயக்கும் (owner-operated) சிறு வணிக நிறுவனங்களில் பல கனடா அவசர வணிகக் கணக்குக்குத் (Canada Emergency Business Account (CEBA)) தகுதி பெறுவதற்கான விதிகளைத் தளர்த்துவதாகப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று அறிவித்தார். இந்த விரிவாக்கம், கனேடியர்கள் தங்கியிருக்கும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கு சிறு வணிக நிறுவனங்களுக்கு உதவும்.

உலகத் தொற்று நோய் காரணமாக வருமானம் குறைவடைந்துள்ள கால கட்டத்தில் செயற்படு செலவினத்தை ஈடு செய்வதற்கு மேலும் அதிகமான கனேடிய சிறு வணிக நிறுவனங்கள் வட்டியில்லாக் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு CEBA வில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் உதவியளிக்கும். தமது வணிக நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வருமானத்தைப் பெறும் உரிமையாளர்கள், ஒப்பந்தகாரர்களில் தங்கியிருக்கும் வணிக நிறுவனங்கள், சம்பளப் பட்டியலின் மூலம் அன்றி, லாபத்திலிருந்து பணியாளர்களுக்குப் பணம் வழங்கும் குடும்பங்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் என்பவற்றில் பெரும் எண்ணிக்கையானவை இனி வரும் காலத்தில் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.

விரிவாக்கப்பட்ட விதிகளின் கீழ் தகுதி பெறுவதற்கு, 20,000 டொலரிலும் குறைவான மொத்தச் சம்பளங்களை வழங்கும் விண்ணப்பதாரிகளுக்கு:

  • திட்டத்தில் பங்கேற்கும் நிதி நிறுவனத்தில் வணிகக் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்.
  • கனடா வருமான வரி முகவரக வணிகக் கணக்கு இலக்கம் இருப்பதுடன், 2018 அல்லது 2019 ஆம் ஆண்டுக்கான வரிக் கணக்கை அவர்கள் சமர்ப்பித்திருக்க வேண்டும்
  • ஒத்திவைக்க முடியா தசெலவினங்கள் 40,000 டொலர் முதல் 1.5 மில்லியன் டொலர் வரையாக இருக்க வேண்டும். தகுதியுள்ள ஒத்திவைக்க முடியாத செலவினங்களில் வாடகை, வருமான வரி, பயன்பாடுகள், காப்புறுதி போன்றன உள்ளடங்கலாம்.

செலவினங்கள் கனேடிய அரசின் சரி பார்ப்புக்கும், கணக்காய்வுக்கும் உட்படுத்தப்படும். நிதி நிறுவனங்களின் பங்களிப்புடன் பணம் வழங்கப்படும். புதிய தகைமைகளின் கீழ் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் திகதியை உள்ளடக்கிய மேலதிக விபரங்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும். இது வரை 600,000 இற்கும் அதிகமான சிறு வணிக நிறுவனங்கள் CEBA வைப்பெற்றுள்ளன. வணிக வங்கிக் கணக்கைப் பயன்படுத்தாது தனிப்பட்ட வங்கிக் கணக்கைப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும், இது வரை வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்காத புதிய வணிக நிறுவனங்கள் போன்றவற்றுக்கும் உதவியளிப்பதற்கான வழிகளைக் கண்டறிய அரசு செயலாற்றும். கனேடியர்களுக்கும், நடுத்தர வகுப்பு வேலை வாய்ப்புகளுக்கும் முன்னுரிமை வழங்கும் கனேடிய அரசின் கோவிட்-19 பொருளாதார திட்டத்தின் ஒரு அங்கமாக இது அமைகிறது.

கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லை மூடப்பட்டமை மேலும் 30 நாட்கள் நீடிக்கப்படுவதாகப் பிரதம மந்திரி மேலும் அறிவித்தார். இரண்டு நாடுகளினதும் மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடனான முடிவின் ஒரு பகுதியாக இது அமைகிறது.

Updated Emergency Measures by the Canadian Federal Government on May 19th

Throughout the pandemic, the Government of Canada has focused on keeping Canadians safe and healthy and helping families pay their bills by introducing strong measures to protect middle class jobs and support businesses

The Prime Minister, Justin Trudeau, today announced an expansion to the eligibility criteria for the Canada Emergency Business Account (CEBA) to include many owner-operated small businesses. This extended measure will help small businesses protect the jobs that Canadians rely on.

The changes to the CEBA will allow more Canadian small businesses to access interest free loans that will help cover operating costs during a period when revenues have been reduced, due to the pandemic. The program will now be available to a greater number of businesses that are sole proprietors receiving income directly from their businesses, businesses that rely on contractors, and family-owned corporations that pay employees through dividends rather than payroll.

To qualify under the expanded eligibility criteria, applicants with payroll lower than $20,000 would need:

  • a business operating account at a participating financial institution
  • a Canada Revenue Agency business number, and to have filed a 2018 or 2019 tax return.
  • eligible non-deferrable expenses between $40,000 and $1.5 million. Eligible non- deferrable expenses could include costs such as rent, property taxes, utilities, and insurance.

Expenses will be subject to verification and audit by the Government of Canada. Funding will be delivered in partnership with financial institutions. More details, including the launch date forapplications under the new criteria, will follow in the days to come.

To date, over 600,000 small businesses have accessed the CEBA, and the government will work on potential solutions to help business owners and entrepreneurs who operate through their personal bank account, as opposed to a business account, or have yet to file a tax return, such as newly created businesses.

This measure is part of the Government of Canada’s COVID-19 Economic Response Plan, which is putting Canadians and the protection of middle class jobs first.

The Prime Minister also announced that the border closure between Canada and the United States of America has been extended another 30 days. This is part of the decision to keep people in both our countries safe.

Related posts

டிமென்ஷியாவுடன் வாழும் கனடியர்கள் 2050க்குள் மூன்று மடங்காக உயரும்

Lankathas Pathmanathan

ரஷ்ய, பெலாரஷ் அரசாங்க ஆதரவாளர்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகள்

Lankathas Pathmanathan

கனடாவில் உள்ள Belarus தூதரகம் மூடப்படுகிறது!

Gaya Raja

Leave a Comment