December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

கோவிட்-19 உலகத் தொற்றுநோயால் சிரமங்களை எதிர்கொள்ளும் கனேடியர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் உதவியாகக் கனேடிய அரசு
உடனடியான, குறிப்பிடத்தக்க, தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
ஏப்ரல் 11 ஆந் திகதி இரவு, இரண்டாம் இலக்க கோவிட்-19 அவசர நடவடிக்கைச் சட்டம், அல்லது C – 14 சட்டம் ஆளுனர் நாயகத்தின் அங்கீகாரத்தைப் பெற்று நடைமுறைக்கு வந்தது. கோவிட்-19 நெருக்கடியை எதிர்கொள்வதற்கான நிதித் திட்டத்தை அங்கீகரிப்பதற்காக மீளக் கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தின் மக்களவையின் சிறப்பு அமர்வில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

கனடா அவசர சம்பள மானியத்தில் (Canada Emergency Wage Subsidy (CEWS)) 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 8 அன்று அறிவிக்கப்பட்ட நெகிழ்ச்சியான மேலதிக
ஏற்பாடுகள் இந்தப் புதிய சட்டத்தில் உள்ளடங்குவதுடன், திட்டத்தை நடைமுறைப்படுத்துதற்கு 73 பில்லியன் டொலரும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மேம்படுத்தப்பட்ட CEWS, கோவிட்-19 காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட, தகுதிபெறும் வேலைகொள்வோருக்கு ஆதரவளிப்பதுடன், இந்த நெருக்கடியான வேளையில் கனேடியர்கள் தங்கியிருக்கும் தொழில்களைப் பாதுகாக்கவும் உதவியளிக்கும். கனேடிய அரசின் கோவிட-19 பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக CEWS விளங்குகிறது. சுகாதாரம், பாதுகாப்பு, வேலை குறைவடைந்தமை ஆகிய காரணங்களுக்காக வீடுகளுக்கு அனுப்பப்பட்ட
தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்க இந்தச் சட்டம் வேலைகொள்வோருக்கு பலமான ஊக்கியாக அமையும். பணியாளர்களைத்

தொடர்ந்து பேணுவதற்கும், ஏற்கனவே பணி நீக்கப்பட்டவர்களை மீண்டும்
பணியில் இணைத்துக் கொள்வதற்கும் வேலைகொள்வோருக்கு இது உதவியளிக்கும். CEWS திட்டத்தின் மூலம், கனடா முழுவதிலும் உள்ள குடும்பங்கள் நிலையான வருமானத்தைப் பெறக் கூடியதாக இருக்கும். CEWS திட்டத்தில், பணியாளர்களின் வருமானத்தின் முதல் 58,700 டொலர் வரையான பணத்தின் 75 சதவீதம் – அதாவது ஒவ்வொரு பணியாளருக்கும் வாரமொன்றுக்கு 847 டொலர் வரையான உதவித் தொகை கிடைக்கும். இந்தத் திட்டம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆந் திகதியில் இருந்து ஜூன் 6 ஆந் திகதி வரையான 12 வார காலத்திற்கு நடைமுறையில் இருக்கும். அரசதுறை நிறுவனங்களை உள்ளடக்கிய சில விதிவிலக்குகள் தவிர, அனைத்து
அளவுகளையும், பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த
வேலை கொள்வோர் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள். வருமானக் குறைவை அளவிடுவதற்கான பரிசோதனையில் உள்ள நெகிழ்ச்சித் தன்மை
புதிய வணிக நிறுவனங்கள், வேகமான வளர்ச்சியைக் கொண்ட நிறுவனங்கள், லாபநோக்கற்ற நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட தொண்டு அமைப்புக்கள் உட்பட்ட பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் அதிகளவு சீரான வகையில் சம்பள மானியத்தைப் பெறுவதை உறுதி செய்யும். தகுதியான வேலைகொள்வோர், கனடா வருமான வரி முகவரகத்தின் My Business Account இன் மூலமும், இணையம் சார்ந்த செயலி ஒன்றின் மூலமும் விண்ணப்பிக்கலாம். வேலைகொள்வோர், தமது செல்வாக்குக்கு அப்பாற்பட்ட மூலங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் குறைவடைந்துள்ளதைக்
காட்டும் பதிவுகளையும், பணியாளர்களுக்கு வழங்கிய சம்பளம் குறித்த
பதிவுகளையும் பேணவேண்டும். விண்ணப்ப நடைமுறை குறித்த மேலதிக
விபரங்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும்.

கோவிட்-19 உலகத் தொற்றுநோய் குறித்த அனைத்து விடயங்களையும்
கண்காணித்து வரும் அரசு, கனேடியர்களையும் பொருளாதாரத்தையும்
பாதுகாப்பதற்குத் தேவைக்கேற்றவாறான மேலதிக நடவடிக்கைகளை
எடுக்கும்.

The Government of Canada is taking immediate, significant and decisive action to support
Canadians and businesses facing hardship as a result of the COVID-19 global pandemic. Late evening on April 11th, Bill C-14, the COVID-19 Emergency Response Act, No. 2, received Royal Assent, bringing this measure into law. The bill was passed on a special sitting of the House of Commons reconvened to approve the COVID-19 Emergency financial response plan.

The new legislation includes additional flexibilities to the Canada Emergency Wage Subsidy
(CEWS) announced on April 8, 2020, and provides $73 billion in funding to support the program. With these improvements, the CEWS will provide effective support to those eligible employers that are hardest hit by the COVID-19 pandemic and will help protect the jobs Canadians depend on during these difficult times.

The CEWS is a key measure in the Government of Canada’s COVID-19 Economic Response
Plan. It will provide a strong incentive for employers to pay employees who have been sent
home for health and safety reasons or due to lack of work. It will enable employers to retain employees who are still on the payroll and to rehire workers previously laid off. With the CEWS program, families across Canada will be able to count on a steady income.
The CEWS would apply at a rate of 75% of the first $58,700 earned by employees –
representing a benefit of up to $847 per week, per employee. The program would be in place for a 12-week period, from March 15 to June 6, 2020. Employers of all sizes and across all sectors of the economy would be eligible, with certain exceptions including public sector entities.

Flexibility in the measurement of revenue for the purpose of applying the revenue decline test will ensure more consistent access to the wage subsidy across impacted organizations,
including newly created businesses and high-growth companies, as well as non-profit
organizations and registered charities. Eligible employers would be able to apply for the CEWS through the Canada Revenue Agency's My Business Account portal as well as a web-based application. Employers would have to keep records demonstrating their reduction in arm-length revenues and remuneration paid to employees. More details about the application process will be made available in the coming days.

The government continues to monitor all developments relating to the COVID-19 pandemic and will take further action as necessary to protect Canadians and the economy.

Related posts

Derek Sloan கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா? – நாளை வாக்களிப்பு

Lankathas Pathmanathan

கனடாவில் ஒரு COVID மறுமலர்ச்சி நிகழ்கிறது: தலைமை பொது சுகாதார அதிகாரி

Quebec கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற நால்வர் கடலில் மூழ்கியதில் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment