தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 27ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

COVID-19 உலகளாவிய பெருந் தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (வெள்ளிக்கிழமை) பின்வரும் விடயங்களை அறிவித்தார்:

  • கனடிய பொருளாதாரத்தின் முது கெலும்பாக சிறிய மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் விளங்குவதைப் பிரதமர் ஜஸ்ரின்ட் ரூடோ குறிப்பிட்டார். அவை கனடாவில் மிக அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன, பல மில்லியன் குடும்பங்களுக்கு உதவியளிக்கின்றன, எமது சமூகத்துக்குச் சேவையாற்றுகின்றன, எமது நகரங்களையும், பெரு நகரங்களையும் வாழ்வதற்கு மேம்பட்ட இடங்களாக மாற்றுகின்றன.
  • சிறு வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் உதவியாகவும், கனேடியர்கள் வேலையில் தொடர்வதற்கு உதவியாகவும், கனடாவின் பொருளாதாரத்தை மேலும் வலிமையானதாகவும், செல்வச் செழிப்புள்ளதாகவும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஆதரவு வணிக சமூகத்திற்குக்கிடைப்பதை உறுதி செய்வதற்கும், கனடிய அரசு கணிசமான உதவிகளை அறிவிக்கிறது:

தகுதி பெறும் வணிக நிறுவனங்களுக்குக் கனடிய அரசு 75 சத வீதம் வரையான சம்பளமானியத்தை வழங்கும். மார்ச் 18ஆந் திகதி அறிவிக்கப்பட்ட 10 சதவீத மானியம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலை கொள்வோர் வணிக நடவடிக்கைகளைக் குறைக்கவோ, நிறுத்தவோ வேண்டி ஏற்பட்டாலும், பணியாளர்கள் வேலையில் தொடர்வதையும்,

அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக இந்த உதவி வழங்கப்படுகிறது. 2020 மார்ச் 15ஆந் திகதியில் இருந்து இந்த மானியம் நடைமுறைக்குவருகிறது.

அரசு கனடா அவசர வணிகக் கணக்கையும் (Canada Emergency Business Account) ஆரம்பிக்கிறது. இந்தப் புதிய நடவடிக்கைக்கு அமைவாகத், தகுதி பெறும் வணிக நிறுவனங்களுக்கு வங்கிகள் விரைவில் 40,000டொலர் கடன்களை வழங்கவுள்ளன. இந்தக் கடன்களுக்குக்கு அரசு உத்தரவாதமளிக்கும். இந்தக் கடன்களுக்கு முதல் வருடத்தில் வட்டி அறிவிடப்படமாட்டாது. நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட்டால், கடனின் 10,000 டொலர் தள்ளுபடி செய்யப்படும்.

சிறிய மற்றும் நடுத்தர அளவான வணிக நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகளுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கனடிய ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனம் (Export Development Canada), வணிக மேம்பாட்டு வங்கி (Business Development Bank) ஆகியவற்றின் ஊடாக மேலும்

12.5பில்லியன் டொலர் வழங்கப்படும். இதற்கமைய, வணிக நிறுவனங்கள், கோவிட் – 19 காரணமான பாதிப்பை ஈடு செய்வதற்காக உத்தரவாதம் அளிக்கப்பட்ட கடன்களுக்கு நிதி நிறுவனங்களிடம் விண்ணப்பிக்கக் கூடியதாக இருக்கும்.

GST/HST வரிகளையும், இறக்குமதிகளுக்குச் செலுத்த வேண்டிய தீர்வைகள், வரிகள் ஆகியவற்றையும் அறவிடுவதை அரசு ஜூன் மாதம் வரை தாமதம் செய்கிறது. இந்த நடவடிக்கை வணிக நிறுவனங்களுக்கு 30 பில்லியன் டொலர் வரியற்ற கடன்களை வழங்குவதற்கு இது நிகரானது.

(உதவிகள் குறித்த மேலதிக விபரங்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும். புதிய உதவிகள் குறித்த விபரங்கள் Canada.ca/Coronavirus என்ற இணையத்தளத்திலும் உள்ளன.)

  • வணிக நிறுவனங்களுக்கான புதிய உதவிகள் வழங்கப்படும் நிலையில், பணியாளர்களைப் பணிக் குறைப்புச் செய்வதற்குத் திட்டமிடும் நிறுவனங்கள் தமது முடிவுகளை மீளாய்வு செய்ய வேண்டுமெனவும், சம்பளத்தை வழங்குவதற்கு உதவிகிடைப்பதால் ஏற்கனவே பணிக்குறைப்புச் செய்யப்பட்ட பணியாளர்களை மீளவும் பணியில் இணைத்துக் கொள்வது குறித்து ஆராய வேண்டுமெனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கேட்டுள்ளார்.
  • கோவிட் – 19 காரணமாக ஏற்கனவே வேலை இழந்தோருக்கும், சுய தொழில் செய்வோருக்கும் (இந்த வாரம் அறிவிக்கப்பட்ட) கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு (Canada Emergency Response Benefit) மூலம் நிதியுதவி கிடைக்கும்.
  • இளையோர், சமூகத்தில் ஓரம் கட்டப்பட்டவர்கள், வறுமை நிலையில் வாழ்வோர் ஆகியோரை உள்ளடக்கிய, சமூகத்தில் உள்ள எளிதில் பாதிக்கப்படக் கூடியோருக்கான மேலதிக உதவிகள் குறித்துக் கனேடிய அரசு எதிர்வரும் நாட்களில் அறிவிக்கும்.
  • கனடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை 0.25 சத வீதமாகக் குறைத்த முடிவை ஆதரித்த பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அதற்கு நன்றியையும் தெரிவித்தார்.

Updated Emergency Measures by the Canadian Federal Governmenton March 27th

Prime Minister Justin Trudeau highlighted the following updates today (Friday), as Canada continues to address the COVID-19 pandemic:

  • Prime Minister Justin Trudeau acknowledged that small and medium sized businesses are the backbone of the Canadian economy. They are the largest employer in the country; support millions of families; serve our communities and make our towns and cities better places to live.
  • To support small business owners and entrepreneurs, to assist with retention of employment for Canadians and to ensure that business get the help needed to rebuild a more resilient and prosperous economy, the government of Canada is introducing significant supports:

– The government will be providing up to 75% wage subsidy to qualifying businesses. This has been increased from the 10% subsidy announced onMarch 18th.

This has been put in place so that employees can retain their jobs and can be continued to be paid even when their employer’s have had to slow down or stop operations because of COVID-19. This subsidy will be back dated to March 15th, 2020.

– The federal government will also launch the Canada Emergency Business Account.

With this new measure, banks will soon offer $40,000 loans, which will beguaranteed by the government, to qualifying businesses. The loan will be interest free for the first year, and if conditions are met, $10,000 will be forgivable.

-An additional $12.5 billion through Export Development Canada and thenBusiness Development Bank will also be made available to help small andmedium-sized businesses with their operational cash flow requirements. This means that businesses will be able to apply for a guaranteed loan when they go to their financial institutions to get help as they weather the impacts of COVID-19.

-The government will also defer GST/HST payments, as well as duties and taxes owed on imports, until June. This is the equivalent of giving $30 billion in interest free loans to businesses.

(More details about the supports will be made available over the coming days. Information on the new supports can also be found at Canada.ca/Coronavirus)

  • With the new supports for businesses in place, Prime Minister Justin Trudeau, encouraged business who are considering laying off employees to reconsider their options and for those who have laid off workers to consider rehiring them given this payroll support.
  • For people who have already lost their job due to COVID-19 or are self-employed, the Canada Emergency Response Benefit (announced this week) will be available for financial support.
  • The Canadian government will also be announcing additional supports over the coming days for the most vulnerable in the community – including, youth, marginalized people and people who live in poverty
  • Prime Minister Justin Trudeau also supported and thanked the Bank of Canada for reducing the interest rate to 0.25%.

Related posts

Alberta இறையாண்மை சட்டம் குறித்து அவதானித்து வருகிறோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

கனடாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலி

Gaya Raja

விரைவில் தேர்தலா? – வேட்பாளர்களுக்கான அழைப்பு விடுத்த பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment