தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 23ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

  • கொறோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் உதவி புரிவதற்கான 82 பில்லியன் டொலர் பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தை அங்கீகரிக்கும் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் நாளை கூடவுள்ளது.
  • கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 82 பில்லியன் டொலருக்கு மேலதிகமாக, தனி நபர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் உதவியாகப் பின்வரும் நிதியுதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன:

– விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிற் துறைக்கும் கடன்களை வழங்குவதற்காக மேலதிகமாக ஐந்து பில்லியன் டொலர் ஒதுக்கப்படும். விவசாயிகளும், உற்பத்தியாளர்களும்

உணவுப் பயிர்ச் செய்கையைத் தொடர்வதற்கும், கனடியர்களுக்கு உணவு வழங்குவதற்கும் தேவைப்படும் உதவிக்காக இன்று முதல் Farm Credit Canadaவின் ஊடாக விண்ணப்பிக்கலாம்.

கனடாவில் தடுப்பு மருந்தைக் கண்டு பிடிப்பது, அதைத் தயாரிப்பது ஆகியவற்றுக்கென 192 மில்லியன் டொலர் நேரடியாக முதலிடப்படும். இதற்கமைவாக கோவிட்-19 ஐத் தடுக்கும் மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் வன் கூவரைத் தளமாகக் கொண்ட அப்செலெறா (AbCellera) மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் ஒப்பந்தம்.

தடுப்பு மருந்துப் பரிசோதனைக்கும், தயாரிப்புக்கும் குபெக் சிட்டியைத் தளமாகக் கொண்ட மெடிககோ (Medicago) நிறுவனத்திற்கு உதவி வழங்கப்படும் சஸ்கெச்சுவான் பல்கலைக் கழகத்தின் தடுப்பு மருந்தும் தொற்று நோயும் நிறுவனத்தின் கண்டு பிடிப்பு முயற்சிக்கும், மருந்தை மக்களுக்கு வழங்கிப் பரிசோதிக்கும் நடவடிக்கைக்கும் நிதி வழங்கப்படும்.

தடுப்பு மருந்து தயாராகியதும், பெருமளவில் அதைத் தயாரிப்பதற்காகக் கனேடிய தேசிய ஆய்வுச் சபையின் (National Research Council of Canada) மொன்றியோல் வளாகத்தில் முதலீடு செய்யப்படும்.

  • கொறோனா வைரஸின் பரம்பலின் உருப் படிவத்தைத் (model) தயாரித்தும், பரம்பலைக் கண் காணித்தும், இவற்றின் மூலம் அதன் பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கும் BlueDot நிறுவனத்தின் மென் பொருளைப் பயன் படுத்துவதற்குக் கனடிய அரசு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. கனேடிய தயாரிப்பான இந்த மென் பொருள், கோவிட்-19 இன் பரம்பலை அடையாளம் கண்ட உலகின் முதற் தொகுதி மென் பொருட்களில் ஒன்றாக விளங்குகிறது. உலக சுகாதார நிறுவனம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுப்பதற்கு9 நாட்களுக்கு முன்பாகவே இந்த மென் பொருள் அதை அடையாளம் கண்டிருந்தது.
  • அமைச்சர் நவ்தீப் பெய்ன்ஸ் (NavdeepBains) இந்தப் பேராட்டத்தின் பங்குதாரர்களாக விளங்குமாறு நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும், தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களுக்கும், குபெக் மாகாண CEGEP கல்வி நிறுவனங்களுக்கும் அறை கூவல் விடுத்துள்ளார். இந்தக் கல்வி நிறுவனங்களின் ஆய்வு கூடங்களில், இதற்குத் தேவையான வளங்களும், நிபுணத்துவமும் உள்ளன. இந்த நிறுவனங்களில், முகக் கவசங்கள், சுவாச உதவிக் கருவிகள் போன்றனவும், மருத்துவ கருவிகளைத் தயாரிப்பதற்கான முப்பரிமான அச்சிடல் கருவிகள் போன்ற, நவீன தீர்வுகளும் இருக்கின்றன.

பல நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் தேவையை ஈடு செய்வதற்குப் பங்களிப்பதற்கு முன் வந்துள்ளன. உதவி புரிவதற்கு விரும்பும் உற்பத்தியாளர்களும், நிறுவனங்களும் www.buyandsell.gc.ca யில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

  • எமது மருத்துவப் பணியாளர்கள் பரிந்துரை செய்துள்ள சரியான தகவல்கள் கனடியர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்காகக் கனேடிய சமஷ்டி அரசு இன்று முதல் விளம்பரங்கள் மூலமான பரப்புரையை ஆரம்பிக்கிறது.
  • வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் கனேடியர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவதற்குக் கனேடிய அரசு தொடர்ந்து விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுகிறது:

வணிக ரீதியிலான சேவைகள் இயங்கினால், அவை சாத்தியப்படும் வேளையிலேயே கனடியர்கள் உடனடியாகத் திரும்பி வர முற்பட வேண்டும்.

எயார்கனடா (Air Canada), வெஸ்ட்ஜெட் (WestJet), எயார்ட்றாண்சட் (Air Transat), சன்விங் (SunWing) ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் இந்த வாரம் சேவைகளை வழங்கின்றன.

பெருவில் உள்ள கனேடியர்களுக்காக அங்கிருந்து இந்த வாரம் எயார் கனடா மூன்று விமானப் பறப்புக்களை மேற்கொள்வதற்குக் கனடா அனுமதியைப் பெற்றுள்ளது.

இதைப் போன்று மொறோக்கோவில் இருந்து மேலும் இரண்டு விமானப் பறப்புக்களை மேற்கொள்வதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

எயார் கனடா, ஸ்பெய்னில் உள்ள கனடியர்களையும் அழைத்துவரவுள்ளது.

ஹொன்டூறஸில் இருந்து இரண்டு விமானப் பறப்புக்களையும், எக்வடோர், எல்சல்வடோர், குவாத்தமாலா ஆகிய நாடுகளில் இருந்து ஒவ்வொரு விமானப் பறப்பையும் மேற்கொள்ள எயார்ட் றாண்சட் நிறுவனம் உதவி வழங்கவுள்ளது.

  • பிரதமர் முதல்வர்களுடன் இன்று தொலைபேசி மூல மகாநாடு ஒன்றை நடத்தவுள்ளார். நோயுற்றோரைத் தனிமைப்படுத்தல் (quarantine), சுய தனிமைப்படுத்தல் (self- isolation), குடும்பங்களுக்கும் சிறு வணிக நிறுவனங்களுக்கும் உதவியை வழங்குதல், பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்குவருதல் ஆகியன தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது குறித்து இதில் ஆராயப்படும்.
  • இந்தக் கோடை காலத்தில் நடைபெறவுள்ள ஒலிம்பிக், பராலிம்பிக் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்களை அனுப்புவதில்லையென Team Canadaவும், கனடிய பராலிம்பிக் அணியும் முடிவு செய்துள்ளன. அவர்களது முடிவைப் பிரதமர் ஆதரிக்கிறார்.

சமூக இடை வெளியைப் பேணுதலே – இடைவெளி பேணல் – மக்களைப் பாதுகாக்கும் மிகச் சிறந்த வழியென்பதால் அதைச் செய்யுமாறு அனைத்துக் கனடியர்களையும் அவர் கோருகிறார்.

கோவிட்-19 தொற்றும் ஆபத்து, சந்தர்ப்பம் என்பன எதுவாக இருந்தாலும், அனைத்துக் கனடியர்களும் இடை வெளியைப் பேண வேண்டுமெனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இடைவெளியைப் பேணுவதென்பது அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஏனையோரிடம் இருந்து இரண்டு மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து கொள்வது, மக்கள் கூட்டத்தைத் தவிர்ப்பது, இயலுமான அளவு நேரம் வீட்டிலேயே தங்கியிருப்பது ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

Updated Emergency Measures by the Canadian Federal Governmenton March 23rd

  • Tomorrow, the House of Commons will reconvene to pass emergency legislation to approve the $82 billion Economic Response Plan for people and businesses affected by Coronavirus.
  • In addition to the $82 billion announced last week, to support individuals and business, additional financial supports have been announced:

– an additional $5 billion will be added in lending capacity to support farmers and the agricultural industry. Starting today, farmers and producers can apply through Farm Credit Canada for the support they need to keep food growing, and feeding Canadians.

– $192 million will be directly invested to support vaccine development and production in Canada. This includes :

– an agreement with Vancouver-based AbCellera to support their work on drugs to treat and prevent COVID-19.

– Quebec City-based Medicago, for vaccine testing and production

– funding the University of Saskatchewan’s Vaccine and Infectious Disease Organization, for development and clinical trials, and

– investing in the National Research Council of Canada’s facility in Montreal to mass-produce vaccines once it is available.

  • The Canadian government has signed a contract with BlueDot, to use their software to model, track – and therefore, slow – the spread of Coronavirus. This Canadian-developed software among the first in the world to identify the spread of COVID-19 – 9 days ahead of the World Health Organization’s public warning.
  • Minister NavdeepBains has also sent a Call to Action to every university, college, polytechnic, and CEGEP in the country as their labs have the resources and expertise to be part of this fight. These institutions also have equipment like masks and ventilatorsand innovative solutions they can be part of, including 3D printing of medical supplies. Many institutions and businesses have come forward and many have expressed interest in stepping forward to address the demand. Businesses, manufacturers and institutions who are interested in helping can get more information at www.buyandsell.gc.ca
  • The federal government will be launching advertising campaigns as of today, so that Canadians can get accurate information that has been recommended by our healthcare workers.
  • The Canadian government continues to work with airlines to get stranded Canadians back home:

– If commercial means are available, Canadians should immediately look to returning while they are still available.

– Air Canada, WestJet, Air Transat, and Sunwing all have flights this week;

– Canada has also secured authorizations for Air Canada to operate three flights this week for Canadians in Peru, and two more flights in the coming days from Morocco

– Air Canada will also be repatriating Canadians from Spain

– Air Transat will be helping organize two from Honduras, and one each from Ecuador, El Salvador, and Guatemala.

  • The Prime Minister will hold a call today with Premiers to discuss continued coordination on quarantine and self-isolation and about continuing to move forward with measures to support families and small businesses, and ensure our economy rebounds.
  • Team Canada and the Canadian Paralympic Team have decided not to send athletes to the Olympic and Paralympic Games this summer. The Prime Minister supports their decision, and encourages all Canadians to practice Social distancing – physical distancing –as is the single best way to keep the peoplesafe.

Social-distancing is recommended for ALL Canadians, regardless of their risk or exposure to COVID-19, and consists of maintaining a personal space of 2m around them at all times; avoiding groups and staying home as much as possible.

Related posts

சூடானில் இருந்து கனேடியர்களை வெளியேற்றும் இரண்டு கனடிய விமானங்கள்

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு ஆதரவாக சேமிப்பு பத்திரங்கள் விற்பனையில் ….

Lankathas Pathmanathan

Rwanda அரசாங்கத்திற்கு உதவிய குற்றச்சாட்டு விசாரணையில் RCMP அதிகாரி கைது

Lankathas Pathmanathan

Leave a Comment