December 12, 2024
தேசியம்
செய்திகள்

இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அவதானமாக உள்ளோம் – கனடியப் பிரதமர் Justin Trudeau

கனடிய அரசாங்கம் இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் அவதானமாக உள்ளதாக கனடிய பிரதமர் Justin Trudeau  தெரிவித்தார். கனடிய நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் எதிர்கட்சி உறுப்பினரின் கேள்வி ஒன்றிற்கு புதன் கிழமை பதிலளிக்கையில் பிரதமர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கனடிய பிரதமரிடம் எதிர்கட்சியினால் கேள்வி எழுப்பப்பட்டது. நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் Sherwood Park – Fort Saskatchewan  தொகுதியின் Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Garnett Genuis இந்தக் கேள்வியை எழுப்பினார்.

கடந்த June மாதம் கனடிய நாடாளுமன்றத்தில் இலங்கையின் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலை குறித்து சர்வதேசம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டதை சுட்டிக்காட்டிய Genuis அது குறித்து கனடிய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டது என கேள்வி எழுப்பினார்.

இலங்கை இராணுவ அதிகாரி ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்த தடை போல கனடாவும் நடவடிக்கை எடுக்குமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.    இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்பத் தவறியதாகவும் Genuis ஆளும்  Liberal அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டினார்

இதற்கு பதிலளித்த கனடிய பிரதமர்  Trudeau தனது அரசாங்கம் இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் அவதானமாக உள்ளதாக கூறினார். இதே வேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில்  இலங்கை தனது அணுகு முறையை மாற்றுவதற்கான முடிவால் கனடா ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் François-Philippe Champagne இந்த கருத்தை தெரிவித்துள்ளார். பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்ம் குறித்த விடயங்களில் மேலும் நடவடிக்கை எடுக்க கனடா இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.வளமான இலங்கையை ஆதரிக்க தயாராக உள்ளதாகாவும்  கனடிய வெளி விவகார அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் Justin Trudeau வெற்றி!

Lankathas Pathmanathan

சீனாவின் தேர்தல் குறுக்கீடு திட்டம் குறித்து பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது?

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – September மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment