December 12, 2024
தேசியம்
செய்திகள்

நாடு கடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு விரைவான, அமைதியான தீர்மானத்திற்கு அரசாங்கம் தயாரார்: பிரதமர் Trudeau

கனடாவின்  பெரும்பாலான பகுதிகளில் புகையிரத சேவையை சீர்குலைத்துள்ள British Columbia மாகாணத்தின் குழாய் வழித் திட்டம் தொடர்பான தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் புகையிரத முற்றுகைகளுக்கு தீர்வு காணும் வகையில் விரைவான, அமைதியான தீர்வில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக கூறப்பட்டுள்ளது. பிரதமர் Justin Trudeau இந்தக் கருத்தைத் தெரிவித்தார். தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் புகையிரத முற்றுகைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் Trudeau அவசரசம் பவம் பதிலழிப்பு குழுவை (Incident Response Group) திங்கள் கிழமை சந்தித்தார். மூத்த அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்தக் குழு, தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் புகையிரத முற்றுகைகள் குறித்து விவாதித்துள்ளது.

கனடியர்களுக்கு பெரும் சவால்

பல கனடியர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும் சவாலாக உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டுள்ள பிரதமர் Trudeau நிலைமையை விரைவாகவும் அமைதியாகவும் தீர்ப்பதில்  தொடர்ந்து கவனம் செலுத்துவதாக கூறினார். அவசர சம்பவம் பதிலழிப்பு குழுவுடனான சந்திப் பின் பின்னர் சுதேச தலைவர்கள் (Indigenous leaders) மற்றும்  மாகாண முதல்வர்கள் பலருடனும் தொலைபேசியில் கலந்துரையாடல்களை மேற் கொண்டுள்ளதாகவும் பிரதமர் Trudeau தெரிவித்தார்.

அமைச்சர் போராட்டக் காரர்கள் சந்திப்பு

கடந்த வார இறுதியில், கனடிய சுதேச சேவைகள் அமைச்சர் (Indigenous Services Minister) Marc Miller புகையிரத முற்றுகை போராட்டம் தொடரும் Belleville பகுதிக்கு விஜயம் மேற் கொண்டு போராட்டங்களை மேற் கொண்டு வரும் தரப்பினருடன் சந்திப்புகளை நடத்தினார். இந்த சந்திப்பு சுமாரான முன்னேற்றம் அடைந்ததாக அமைச்சர் கூறினார். அங்கு விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து பிரதமருடனும் ஏனைய அமைச்சர்களுடனும்  விவாதிக்க வேண்டி உள்ளதாக அமைச்சர் Miller தெரிவித்திருந்தார்.

எதிர்க் கட்சியின் விமர்சனம்

இந்த விடயத்தில் Liberal அரசாங்கத்தின் நடவடிக்கையை Conservative கட்சித் தலைவர் Andrew Scheer விமர்சித்துள்ளார். தொடரும் முற்றுகைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க RCMPக்கு அரசாங்கம் உத்தர விட வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார். முன்னதாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் புகையிரத முற்றுகைகளை Liberal அரசாங்கம் கையாண்டது குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமர் Trudeau இந்த வாரம் Caribbeanக்கான தனது திட்ட மிட்ட பயணத்தை இரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள்

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக திங்கள் கிழமை இரண்டாவது தினமாக கனடா அமெரிக்க எல்லையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. Niagara பிராந்தியத்தில் உள்ள பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் . Niagara நீர் வீழ்ச்சியில் உள்ள அமெரிக்க – கனடா எல்லைப் பாலத்தில் ஞாயிற்றுக் கிழமையும் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கனடாவில் தொடரும் போராட்டத்திக்கான ஆதரவு இப்போது எல்லை தாண்டி அமெரிக்காவிற்கும் பரவியுள்ளது.   British Colombia மாகாணத்துக்கு தெற்கே Seattleலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகையிரதங்களை தடுத்துள்ளனர்.

Related posts

நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள் மீண்டும் கலந்து கொள்ளலாம்

Lankathas Pathmanathan

தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக விரையமாகும் பால்

Brian Mulroney கனடிய அரசியலின் ‘சிங்கம்’ !

Lankathas Pathmanathan

Leave a Comment