தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்கனடா மூர்த்தி

விரியும் புதிய அரசியல்களம்? : ‘பாரதி விழா’ vs ‘தமிழியல் விழா’

நடந்து முடிந்த தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டங்களை சற்றுக் கூர்மையாக அவதானித்த போது – குறிப்பாக இரண்டு நிகழ்வுகளைக் கவனித்த போது – “போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கக் கூடாது” என்ற வசனம் மீண்டும் – மீண்டும் – மீண்டும் மனதில் ஒலித்தது.

2020இல் “தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு” எனச் சொல்லி, இரண்டு அணிகள் ஒன்று மற்றொன்றை விமர்சித்தும் கீழறுத்தும் வெளிப்படையாக நடந்து கொண்டதை தமிழ்ச் சமூகம் கண்டது.  மரபுத் திங்களையொட்டி முன்னாள் நகர சபை உறுப்பினர் நீதன் ஷான் பாரதியாருக்கு விழா எடுக்கிறார். நிமிர்வு என்ற நிகழ்ச்சியை செய்கிறார். வாருங்கள்.. என அழைத்தது ஒரு அழைப்பு. போட்டியாக தமிழியல் விழாவிற்கு வாருங்கள்… பாஜகவுடன் ஈழத் தமிழர் இணைய இதுவே கடைசிச் சந்தர்ப்பம் என்றது மற்றைய அழைப்பு.

பாரதி விழாவை நடத்தியது நீதன்! தமிழியல் விழா நிகழ்வை முன் நின்று நடத்தியது கனடியத் தமிழர் தேசிய அவை/கனடாத் தமிழ்க் கல்லூரி/அறிவகம்! இரண்டு நிகழ்வுகளும் போட்டிக்கு நடத்தப்பட்டவை என்பது வெளிப்படையான உண்மை.

தமிழ் மொழியைக் கொண்டாட இரண்டு நிகழ்ச்சிகள் நடப்பது தவறல்ல. ஆனால் பொறாமை கொண்ட விதத்தில்  “எனக்கா உனக்கா பலம்?”  என்று காட்ட அவை நடத்தப்பட்டு முடிந்திருப்பது தான் தவறு.  “தமிழ் மரபுத் திங்களுக்கு உண்மையான உரிமையாளர் நாமே” என்று இரண்டு பகுதியினரும் சொல்லாமல் சொல்லித் தான் தமது அணிக்கு வலுச் சேர்த்திருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால்

(1) பொறாமை கலந்ததொரு ‘போட்டி’யை வெளிப்படையாக ஆரம்பித்து

(2) சமூகத்தைப் பிரித்து ‘மரபுக்கு உரிமை’ கோரிய

(3) குறுகிய அரசியல் செய்திருக்கிறார்கள்.

“மரபுரிமை என்பது இது தான்” என்று நினைக்கிறார்கள் போலும். இந்த பொறாமைக் கலாச்சாரம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியது.

வளர்ச்சிக்கான எந்த ஒரு முயற்சியும் சுய இன்பத்திற்கானதாக இருக்க முடியாது. ஆனால் இங்கு, இரண்டு குழுக்கள் பிரிந்து நின்று எரிச்சல் படுத்துவதாயும், இரண்டுமே தமிழ் மரபுத் திங்கள் தன்னால் தான் உருவானது என்று Claim பண்ணுவதாயும் இருக்க….   “உவங்களைப் பாருங்கோ..” என சமூக அங்கத்தினர்கள் இளக் காரமாக சிரிக்கவும், இறுதியில் அவ்விரு குழுக்களுமே சமூகத்தின் ‘நக்கல்’ பேசு பொருளாகவும் ஆகிவிட்டன. வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

‘தமிழ் மரபுத் திங்கள்’ என வரும் போது விரும்பியோ விரும்பாமலோ அந்த திட்டத்துடன் நீதனின் பெயர் இரண்டறக் கலந்து இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழ்க் கனடியர்களின் சமூக வரலாற்றை கவனித்து வருபவர்களுக்கு இது நன்கு தெரியும். தமிழ் மரபுத் திங்கள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட மட்டுமல்ல, அது அரசியல் மயப்படுத்தப்படவும் நீதனின் பங்களிப்பு அதிகம். தமிழ் மரபுத் திங்கள் கனடாவில் உருவாகியதற்கு அவரது உழைப்பு மிகப் பெரியது. இதற்காக கனடாவின் தமிழ் சமூகம் நீதன்ஷானின் பங்களிப்பை அங்கீகரித்துக் கௌரவத்துடன் பார்க்க வேண்டும். நாணயமானவர்கள் செய்ய வேண்டியது அது.

ஆனால் ஒரு நாணயத்திற்கு மறு பக்கமும் உண்டு. அது தான் நீதனின் அரசியல் அபிலாஷைகள்! தனிப்பட்ட நீதனின் தனிப்பட்ட அரசியல் அபிலாஷை தான் மரபுத்திங்கள் என்ற பொது விடயத்தில் அவருக்கான பலமும் பல வீனமுமாக மாறுகிற தென்பதை நாம் கவனிக்காமல் இருக்க முடியாதுள்ளது. “தமிழ் மரபுத் திங்களுக்காக அவர் இட்ட உழைப்பானது, தனக்கு வாக்களிக்க என வாக்காளர் கூட்ட மொன்றைச் சேர்ப்பதற்காக அவர் செய்து வரும் அரசியல் சித்து விளையாட்டு” என்ற குற்றச்சாட்டும் உண்டு. இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஜனநாயக அரசியலில் முடிசூட ஆசைப்படும் யாராயிருந்தாலும் அவருக்கு வரும் என்பதென்னவோ உண்மை தான். (இதென்ன இயக்க அரசியலா… எதிரியை கொன்று விட்டு தானே தனக்கு முடி சூட.?) இங்கு, ஜன நாயக அரசியலில், வாக்காளரைக் கவர அரசியல் வாதி சித்து விளையாட்டுக்களோடு செயல்பட வேண்டியதும் இயல் பானதே. (இதை நீங்க நம்பாவிடில் Patrick Brownனை உதாரணமாக பாருங்கள்)

ஆனால்… வாக்காளர்களைக் கவர்வதற்காக செய்யப்படும் முயற்சிகளை அரசியல்வாதிகள் வெளிப்படையாகச் செய்ய வேண்டும். அம் முயற்சிகளுக்கு வேறு முலாம் பூசிக் கொண்டு வந்து ஜில்மால் விட முடியாது. விட்டால்? ம்ஹூம்.. மற்றவர்கள் என்ன முட்டாள்களா.. தோல்வி தான் கிட்டும்.   (காக்காக்கு காக்கா ஆடு விற்க முடியாது.)  நல்ல தொரு சமூக அரசியல் அனுபவம் கொண்டவர்கள் அப்படிச் செய்யக் கூடாது. செய்தால் அது குழந்தைத் தனம்.

நீதன் ஒரு குழந்தை அல்ல. கனடாவின் தமிழ் நிலைப்பட்ட அரசியலைக் கரைத்துக் குடித்தவர்கள், மூத்த சமூக சேவையாளர்கள், அனுபவம் மிக்க பத்திரிகையாளர்கள் எனப் பலரும் – நீதன் எதையாவது சாதித்து நம் தமிழ் சமூகத்திற்கு பெரிதாக ஏதாவது செய்வார் என பெரிதும் நம்புகிறார்கள். வெளிநாடுகள் சில கூட நீதனின் அரசியல் ஈடுபாட்டை கவனித்துள்ளன. (சிங்கப்பூர் தொலைக்காட்சியினர் தாமாகவே முன் வந்து நீதன் குறித்த ஆவணப் படம் ஒன்றைத் தயாரித்தார்கள்: ‘இளம் தலைமுறைக்கு அவர் ஒரு உதாரணம்’ என்று. )

இவையெல்லாம் நீண்ட காலமாக – தன் இளம் வயதிலிருந்தே – தமிழ்க் கனடியர்களை நீதன் பிரதிநிதித்துவப்படுத்தியதால் அவருக்குக் கிடைத்த வெகுமானங்கள். அவை ஒரு புறமிருக்க, நீதனை தொடர்ந்து இனி வரும் காலங்களிலும் ‘இளைய சமுதாயத்தின் பிரதி நிதி’ என்று சொல்ல முடியாது. இப்போது அவரது அரசியல் அனுபவத்திற்கே வயதாகி விட்டது. அதனால் அவரது நடவடிக்கைகளில் ஒரு வகை முதிர்ச்சி தென் பட வேண்டும். ஆனால் நடை முறையில் அப்படியாகத் தெரியவில்லை.

“நீதன் எந்த ஒரு விடயத்தையும் ஆழமாக தீர்க்கமாக செய்திவதில்லை. அவர் இங்கும் அங்கும் பாய்வதற்கு சமூக சேவையோ அல்லது அரசியலோ ஒரு களமல்ல” என்பது பல வருடங்களாக நீதனை நோக்கிச் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டு. அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனாலும் அக் குற்றச்சாட்டை நீதனின் தனிப்பட்ட ஆளுமை குறித்து செய்யப்படும் ‘பொறாமை கலந்த விமர்சனம்’ என்று நாம் அதிலிருந்து விலகிக் கொள்ளலாம். ஆனால் அதுவே சமூகத்தில் கீறல் ஏற்படவைக்குமாயின் அது குறித்துப் பேச வேண்டித்தான் உள்ளது. நீதன் திட்டங்கள் பலவற்றையும் தன் மடியில் இழுத்துப் போடுவதும் பின்னர் அடுத்ததற்கு நகருவதுமாக இருப்பது இந்த விமர்சனத்தின் அடித் தளம் ….

உதாரணத்திற்குஒன்று:  சிலவருடங்களுக்குமுன்னர்யாழ்நூலகம்குறித்தஒருதிட்டம்நீதனால்பேசப்பட்டது.  “நகரசபைஉறுப்பினர்நீதன்நகரமுதல்வர் John Toryயுடன்வன்னிசென்றுகண்ணீர்விட்டுஅழுதார்”  என்றெல்லாம்சொல்லப்பட்டது. அந்தத்திட்டம்பற்றிஇப்போதுநீதனும்பேசுவதில்லை. (அவர்பேசவதில்லைஎன்பதைக்கூடவேறுயாரும்பேசுவதும்இல்லை.) திடீரெனப்பார்த்தால்   “நீதன்தமிழ்சமூகமையம்கட்டுவதில் busy” என்கிறார்கள். இப்போ 30 பேருக்குவிருதுகொடுத்துவிட்டு, “பாசிசத்திற்குவிழாஎடுக்காமல்பாரதிக்குவிழா” எடுத்துக்கொண்டிருக்கிறாராம்..இதென்னவந்தேமாதரம்விளையாட்டு? அடுத்துஅவர்திட்டம்தான்என்ன?  ‘

இங்குநீதன்விமர்சிக்கப்படுகிறார்என்பதற்காகஅவரைஓரம்கட்டமுனையும் ‘மற்றையகுழுவினர்’ ஒன்றும்விமர்சனத்திற்குஅப்பாற்பட்டவர்கள்என்றுயாரும்கருத்தில்கொண்டுவிடக்கூடாது.அந்தஅமைப்புக்கள், கல்விக்கழகங்கள்வெகுகாலமாகவேதத்தம்சமூகப்பணியில்சமூகம்சார்ந்துஉழைத்துக்கொண்டுஇருக்கலாம். அதற்காகநீதனின்உழைப்பைதிருடுவதற்குஅவர்களுக்கு ‘உரிமை’ கிடையாது.

தமிழ்மரபுத்திங்கள்போன்றதொருசமூகம்சார்ந்தஒருவிடயத்தையார்வேண்டுமென்றாலும்ஆரம்பிக்கலாம். காலாகாலமாக, அதற்கென்னஉரிமைகோரல்கள்வேண்டிக்கிடக்கிறது?

கனடாவில்நமதுதமிழ்ச்சமூகம்சிறியதொருசமூகம். இதன்ஒற்றுமைதான் (அதுஇருக்கிறதோஇல்லையோ) அதற்குஒருபலம்.  மூன்றுநான்குதேர்தல்தொகுதிகளில்நாம்செறிந்துவாழ்வதால், “தமிழரின்ஒற்றுமைபெரியதொருவாக்குப்பலமாகமாறக்கூடும்”  என்றநினைப்பில்தான்கட்சிசார்அரசியல்வாதிகளுக்குநம்தமிழ்சமூகம்கவனத்தில்படுகிறது.அதனால்தான்மத்தியஅரசு, மாகாணஅரசு, நகரசபைகள்எனஅனைத்துநிலைகளிலும்எம்மீதானகவனம்தரப்படுகிறது.

ஒருவகையில்பார்த்தால்அந்தப் ‘பலம்’ தமக்குஉதவிகரமாகஇருக்கவேண்டும்என்றஆசையில்தான்தமிழ்மரபுத்திங்களைமூன்றுநிலைஅதிகாரங்களும்அங்கீகரித்துள்ளன. சங்கஇலக்கியத்தையோ, திருக்குறளையோ, தொல்காப்பியத்தையோகண்டுமயங்கிமற்றஅரசியல்வாதிகள்எம்மைநாடிவரவில்லை. அவர்களுக்குநாம்கண்ணில்படுவதுவாக்காளர்களாகவே.! இதைத்தான் ‘பிச்சுப்பிடுங்கும்’ பாரதிவிழாக்காரர்களும், தமிழியல்விழாக்காரர்களும்உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்தசமூகமேம்பாட்டுஒற்றுமையைவலுப்படுத்தும்வகையில்தான்நம்செயல்பாடுகள்இருக்கவேண்டும். ‘வாக்குஅரசியலை’ ஒருபலமாகஎன்றும்நாம்வைத்திருக்கவேண்டும். அந்தப்பலத்தைஉறுதிசெய்வதற்குபோடப்படும்உரமேமரபுத்திங்கள்போன்றகலாச்சாரநிகழ்வுகள். அதைமக்களும்நன்குபுரிந்துவைத்திருக்கிறார்கள். அதையெல்லாம்நலிவடையவைப்பதுபோல, சமூகத்தைகேலிக்கூத்தாக்குவதுபோலசுயநலவிளையாட்டுக்களையாரும்விளையாடக்கூடாது.

இன்னும்பச்சையாகசொல்லப்போனால், “2020  ‘பாரதிவிழா’, ‘தமிழியல்விழா’ இரண்டுமேஉண்மையில்நம்மரபின்மேம்பாட்டிற்காகநடத்தப்பட்டவைஅல்ல. மாறாகவாக்குஅரசியலைஇரகசியமையமாகக்கொண்டுதான்ஒழுங்குபடுத்தப்பட்டன”  என்றசந்தேகம்இப்போதுபலருக்கும்பலமாகஎழுகிறது.

“என்னசந்தேகம்?” என்கிறீர்களா?

ஒருவேளை  “அடுத்தமாகாணசபைத்தேர்தலில்புதியஜனநாயகக்கட்சி (NDP) சார்பில்நீதன் Scarborough Rough Park தொகுதியில்களம்இறங்கினால், Conservative கட்சியின்விஜய்தணிகாசலத்தின்எதிர்காலம்எப்படியாகும்”  என்றஒருகணக்கு ‘பாரதிவிழா’, ‘தமிழியல்விழா’ இருபகுதிகளுக்கும்இருக்கக்கூடும்.அதனால்ஏற்பட்டிருக்கும்அரசியல்முறுகலேமரபுத்திங்களைஒருபோட்டிக்களமாகமாற்றிவிட்டதுஎன்பதேஅந்தச்சந்தேகம்…..

“இல்லை..இந்தவிமர்சனம்விசமத்தனமானது. உண்மைஅப்படிஅல்ல..நாம்மரபுத்திங்களின்மேன்மைக்காகத்தான்சண்டைபோடுகின்றோம் ..வாக்குஅரசியலைமுன்வைத்துஅல்ல..”என்பதைஇந்த ‘பாரதிவிழா’, ‘தமிழியல்விழா’ தரப்பினரும்உடனடியாகத்தெளிவுபடுத்துவார்களேயானால்மிகவும்நன்றாகஇருக்கும். அங்ஙனம்தெளிவுபடுத்தினால், நாமும்ஏதாவதுஒருபகுதியுடன்சேர்ந்து ‘மரபுத்திங்களின்மேன்மைக்காக’ பாடுபடலாம்.

ஆனால்அவ்வாறுதெளிவுபடுத்தாமல்விடுவார்களேயானால்you are guilty until proven innocent!

கனடாமூர்த்தி

Related posts

Brian Mulroney: முன்னாள் பிரதமரை நினைவு கொள்ளல்

Lankathas Pathmanathan

காக்க காக்க “தெருவிழாவை” காக்க!

Lankathas Pathmanathan

ஆரம்பித்தது தேர்தல் பிரசாரம்: நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை!

Leave a Comment