அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஏனைய நாடுகள் மீது செயல்படுத்தும் கடுமையான வரிகளிலிருந்து கனடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வரிவிதிப்பு விவரங்களை Donald Trump புதன்கிழமை (02) பிற்பகல் வெளியிட்டார்.
இதில் 10 சதவீத அடிப்படை வரிக்கு உட்படுத்தும் நாடுகளாக கனடா வெள்ளை மாளிகையினால் பட்டியலிடப்படவில்லை.
ஏனைய நாடுகள் மீது செயல்படுத்தும் கடுமையான வரிகளிலிருந்து கனடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டாலும், சில கனடிய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என தெரியவருகிறது.
மேலும் புதன் நள்ளிரவு முதல் கனடா உட்பட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் 25 சதவீத வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில், தனது அரசாங்கம் கனடியர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் என பிரதமர் Mark Carney நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கனடா தனது எதிர் நடவடிக்கைகளில் குறிப்பாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.