பொதுத் தேர்தல் பணிகளுக்காக 200,000-க்கும் மேற்பட்டவர்களை தேர்தல் திணைக்களம் தற்காலிகமாக பணியமர்த்துகிறது.
கனடிய பொதுத் தேர்தல் April 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதில் பணியாற்றுவதற்காக 200,000-க்கும் மேற்பட்டவர்களை தற்காலிகமாக பணியமர்த்த தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளது .
ஒவ்வொரு பதவிக்கும் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது $20 ஊதியம் வழங்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் பணியாற்ற தகுதியானவர் யார்?
- கனடியப் பிரஜைகளாக இருக்க வேண்டும்.
- குறைந்தது 16 வயதாக இருக்க வேண்டும்.
- பொதுத் தேர்தலில் பணிபுரியும் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாகாது.