தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டமூலம் மீதான வழக்கை கனடிய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சட்டமூலம் 104 எனப்படும் தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்ட மூலத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்கள் மேன்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (27) தள்ளுபடி செய்துள்ளது.
இந்த முடிவு குறித்து Ontario மாகாண இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இது கனடா வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இன அழிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள முனையும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கும் அவர்களின் தலைமுறையினருக்குமான கல்வி அறிவூட்டலுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என அவர் குறிப்பிட்டார்.
கனடிய உச்சநீதிமன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தத் தீர்ப்பு அமைகிறது.
May 2021 இல், Ontario அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் May 12 முதல் 18 வரை “தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்” என்ற சட்டத்தை நிறைவேற்றியது.
இந்த ஒரு வார காலத்தில், இலங்கைத்தீவில் May 2009-இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின் போது தமிழர்களுக்கு எதிரான இழைக்கப்பட்ட இனப்படுகொலை குறித்து Ontario பாடசாலைகளில் பயிற்றுவிக்க ஊக்குவிக்கப்பட்டது.
இந்த சட்டமூலத்தை 2019 April மாதம் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் முன்மொழிந்தார்.
இலங்கை கனடா Brampton சங்கம் (Sri Lanka Canada Association of Brampton-SLCAB) இந்த சட்டமூலத்திற்கு எதிராக கனடிய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை கனடிய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்பளித்துள்ளது.