Conservative தலைமைப் போட்டியின் ‘நேர்மை’ குறித்து Liberal தலைவர் Mark Carney கேள்வி எழுப்பினார்.
Conservative தலைமைப் போட்டியில் வெளிநாட்டுத் தலையீடு இருந்ததாக Globe and Mail செவ்வாய்க்கிழமை (25) செய்தி வெளியிட்டது.
தலைமைத்துவ போட்டியின் போது தெற்காசிய சமூகத்திற்குள் Pierre Poilievre-ருக்கு ஆதரவாக நிதி திரட்டுவதற்கும் இந்திய முகவர்கள் உதவியதாக கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையை (CSIS) மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியானது.
கனடாவில் வெளிநாட்டு தலையீடு நடவடிக்கைகள் குறித்த இரகசிய விளக்கங்களைப் பெறுவதற்கு தேவையான பாதுகாப்பு அனுமதியை Pierre Poilievre பெறாத நிலையில் இந்த தகவலை அவருடன் CSIS பகிர்ந்து கொள்ளவில்லை என தெரியவருகிறது.
இந்த நிலையில் Conservative கட்சியின் தலைவராக Pierre Poilievre தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியின் நேர்மையை Liberal தலைவர் Mark Carney கேள்விக்குள்ளாக்கினார்.
அதேவேளை பாதுகாப்பு அனுமதி பெறத் தவறியதற்காக அவர் Pierre Poilievre-ரை கடுமையாக சாடினார்.
கனடா பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் அவ்வாறு செய்யத் தவறுவது குறித்து Mark Carney கேள்வி எழுப்பினார்.
இந்த அறிக்கை குறித்து Pierre Poilievre இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால் 2022 Conservative தலைமைப் போட்டியில் அனைத்து விதிகளும் சட்டங்களும் பின்பற்றப்பட்டதாக கட்சி உறுதிப்படுத்தியது.