Pearson விமான நிலையத்தில் Delta பயணிகள் விமானம் விபத்துக்கு உள்ளானது குறித்த விசாரணையின் முதற்கட்ட அறிக்கை வெளியானது.
80 பேருடன் பயணித்த Delta விமானம், Toronto Pearson சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் மொத்தம் 21 பேர் காயமடைந்தனர்.
February மாதம் 17-ஆம் திகதி நிகழ்ந்த இந்த விபத்து குறித்த ஆரம்ப கண்டுபிடிப்புகளை கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (Transportation Safety Board of Canada – TSB) வியாழக்கிழமை (20) வெளியிட்டது.
குறிப்பிட விமானத்தின் கட்டமைப்பு ஒருமைப்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விமானம் செயல்படவில்லை என தனது ஆரம்ப அறிக்கையில் TSB குறிப்பிட்டது.
இந்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை என TSB இன் தலைமை விசாரணையாளர் Ken Webster கூறினார்.
வியாழன் வெளியான அறிக்கை முழுமையான அறிக்கை அல்ல எனவும் மேலதிக விவரங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.