கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டி இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
Markham நகரைச் சேர்ந்த 25 வயதான கோகிலன் பாலமுரளி, North York நகரைச் சேர்ந்த 25 வயதான பிரன்னன் ஸ்கந்த பாலசேகர் ஆகியோர் March 8 அன்று கைது செய்யப்பட்டனர்.
Pickering நகரில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச் சாட்டில் இவர்கள் இருவரை Toronto காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் ஒவ்வொருவர் மீதும் முதல் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இந்த கொலை சதித்திட்டம் நிகழ்ந்ததாக கூறப்படும் இடம் Pickering’s Mansion Kitchen and Bar என தெரியவருகிறது.
Scarborough-வில் மதுபான விடுதி ஒன்றில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற மறுதினம் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனாலும் இவர்கள் இருவரையும் Scarborough Piper Arms மதுபான விடுதியில் துப்பாக்கி சூட்டுடன் தொடர்புபடுத்த காவல்துறை பேச்சாளர் மறுத்தார்.
இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிருபிக்கப்படவில்லை .