தேசியம்
செய்திகள்

கனடிய இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் வரிகள் 30 நாள் இடைநிறுத்தம்!

கனடிய இறக்குமதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் வரிக் கட்டணங்கள் 30 நாள் இடைநிறுத்தப்படுகின்றன.

கனடா, அமெரிக்கா, Mexico இடையேயான USMCA  சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா ஜனாதிபதி இடை நிறுத்தினார்.

கனடா, Mexico ஆகிய நாடுகளின் இறக்குமதிகள் மீது அமெரிக்க அதிபர் Donald Trump செவ்வாய்க்கிழமை (04) வரி விதித்தார்.

ஆனால் அந்த முடிவை அவர் வியாழக்கிழமை (06) மாற்றிக்கொண்டார்.

கனடிய இறக்குமதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் வரிக் கட்டணங்கள் 30 நாள் இடைநிறுத்தப்படும் என Donald Trump அறிவித்தார்.

இதற்கான உத்தரவு வெள்ளிக்கிழமை (07) நள்ளிரவு 12:01 மணிக்கு நடைமுறைக்கு வந்தது.

இந்த வரி விலக்கு April 2 ஆம் திகதி முடிவடைகிறது என தெரியவருகிறது.

இதன் விளைவாக, 125 பில்லியன் டாலர் அமெரிக்க தயாரிப்புகள் மீதான வரி கட்டணங்களை April 2 ஆம் திகதி வரை இடைநிறுத்த கனடா முடிவு செய்துள்ளது.

நிதியமைச்சர் Dominic LeBlanc  இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

ஆனால் அமெரிக்காவின் நகர்வுகளுக்கு அமைவாக கனடாவின் பதில் நடவடிக்கைகள் தொடரும் என தொழில்துறை அமைச்சர் Francois-Philippe Champagne தெரிவித்துள்ளார்.

Related posts

2032க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்புக்கு செலவிட கனடா உறுதி

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கான புதிய கனடிய தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

கனடாவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாள்

Gaya Raja

Leave a Comment