அமெரிக்க ஜனாதிபதி கனடாவுக்கு எதிராக வரிகளை அமுல்படுத்தினால் அதனை எதிர்கொள்ள கனடா தயாராகியுள்ளதாக கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி கடுமையான வரி கட்டணங்களை அமுல்படுத்தினால், கனடா வர்த்தகப் போருக்கு தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வாக்குறுதி அளித்தபடி, செவ்வாயகிழமை (04) கனடாவுக்கு எதிராக வரிகளை அமுல்படுத்தினால் அதனை எதிர்கொள்ள கனடா தயாராகியுள்ளதாக அவர் கூறினார்.
“இந்த நியாயமற்ற முடிவுக்கு கனடா பதிலளிக்காமல் விடாது” என திங்கட்கிழமை (03) பின்னிரவு வெளியான ஒரு அறிக்கையில் Justin Trudeau தெரிவித்தார்.
“அமெரிக்காவின் வரி விதிப்பு மீளப் பெறப்படும் வரை கனடாவின் வரி கட்டணங்கள் நடைமுறையில் இருக்கும்” எனவும் பிரதமர் மேலும் கூறினார்.
கனடாவை பொருளாதார ரீதியில் பாதிக்கும் வரி கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை நடைமுறைக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி திங்களன்று (03) தெரிவித்துள்ளார்.
இது நடைமுறைக்கு வந்தால் 155 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு கனடா வதில் வரி விதிக்கும் என பிரதமர் கூறினார்.