இங்கிலாந்தில் நடைபெறும் உக்ரைன் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர் பங்கேற்கிறார்.
ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனில் அமைதிக்கான பாதையை திட்டமிடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் Justin Trudeau இங்கிலாந்து பயணமானார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற உள்ள இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கும் ஐரோப்பியர் அல்லாத ஒரே தலைவர் Justin Trudeau ஆவார்.
“உக்ரைனில் ஒரு நியாயமான, நீடித்த அமைதியை உறுதிப்படுத்த – உக்ரைனின் இறையாண்மை, பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருவதாக இந்த மாநாடு குறித்து கனடிய பிரதமர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
“உண்மையானதும், அர்த்தமுள்ளதும், நீடித்ததுமான சமாதானத்தை ஏற்படுத்த கனடா உதவ முடியும்” என இங்கிலாந்திற்கான கனடாவின் உயர் ஸ்தானிகர் ரால்ப் Ralph Goodale நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்கா இந்த செயல்முறையில் அர்த்தமுள்ள பங்கேற்பாளர்களாக இருக்க வேண்டும் எனவும் Ralph Goodale கூறினார்.