Newfoundland and Labrador முதல்வர் Andrew Furey அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலம் முதல்வராக இருந்த நிலையில் அரசியலில் இருந்து விலகும் முடிவை Andrew Furey எடுத்துள்ளார்.
எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான Andrew Furey, தான் “ஒரு தொழில்முறை அரசியல்வாதி” அல்ல என எப்போதும் கூறி வருவதை நினைவுபடுத்தினார்.
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
தனக்கு பதிலாக ஒரு புதிய தலைவரை தெரிவு செய்யும் போட்டியை ஆரம்பிக்குமாறு கட்சியை கேட்டுக் கொண்டுள்ளதாக Andrew Furey தெரிவித்தார்.
புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தான் தொடர்ந்து முதல்வராக இருப்பேன் என அவர் கூறினார்.
Liberal தலைமையை வென்ற பின்னர் August 2020 இல் அவர் முதல்வரானார்.
இவர் ஒரு வாரத்திற்குள் பதவி விலகும் இரண்டாவது Atlantic மாகாண முதல்வராவார்.
Prince Edward Island முதல்வர் Dennis King கடந்த வாரம் அரசியலில் இருந்து விலகும் தனது முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.