கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனடா கடந்த ஆண்டு அதிகமானவர்களை நாடு கடத்தி உள்ளது.
அகதிகள் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டவர்களை பெருமளவில் கனடா நாடு கடத்தி உள்ளது என புதிதாக வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 November பிற்பகுதியில், கனடாவின் நாடு கடத்தல் எண்ணிக்கை 2015க்குப் பின்னர் மிக உயர்ந்த அளவை எட்டியது.
இந்த ஆண்டு நாடு கடத்தலுக்கு அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.
கனடா January 1 முதல் November 19, 2024 வரை 7,300 பேரை நாடு கடத்தி உள்ளது.
இது 2023 ஆம் ஆண்டை விட 8.4 சதவீதம் அதிகரிப்பாகும்.
2022 ஆம் ஆண்டை விட 95 சதவீத அதிகரிப்பாகும்.
2020 முதல் புகலிட கோரிக்கைக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன் நாடு கடத்தல்களின் அதிகரிப்பு பிணைக்கப்பட்டுள்ளது என கனடாவின் எல்லை பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.