கனடிய hockey ஜாம்பவான் Wayne Gretzky கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump சமூக ஊடகங்களில் புதன்கிழமை இந்த தகவலை வெளியிட்டார்.
Donald Trump உடனும் அமெரிக்காவுடனான அவரது உறவுகள் குறித்து கனடிய ரசிகர்களிடமிருந்து அதிகரித்த விமர்சனங்களை Wayne Gretzky எதிர்கொள்கிறார்.
இந்த நிலையில் அவர் தற்காத்துக் கொள்ளும் வகையில் Donald Trump சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
தங்களுக்குள் உள்ள நட்பின் காரணமாக கனடியர்களினால் Wayne Gretzky விமர்சிக்கப்படுவதை தான் விரும்பவில்லை என Donald Trump தனது பதிவில் வலியுறுத்தினார்.