Liberal கட்சியின் புதிய தலைவருக்கான போட்டியில் கட்சி உறுப்பினர்களுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு புதன்கிழமை (26) ஆரம்பிக்கிறது.
March 9 அறிவிக்கப்படவுள்ள வெற்றியாளர், Justin Trudeauவுக்கு பதிலாக Liberal கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் பதவி வகிப்பார்.
புதிய தலைவர் விரைவில் பொதுத் தேர்தல் அழைப்பு விடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
இந்த போட்டியில் Mark Carney, Chrystia Freeland, Karina Gould, Frank Baylis ஆகியோர் உள்ளனர்.
கருத்துக்கணிப்புகள், நிதி திரட்டலின் அடிப்படையில், Mark Carney, முன்னணியில் உள்ளார்.
Liberal தலைமைப் பதவிக்கான போட்டியில் வாக்களிக்க 400,000 ஆதரவாளர்கள் கட்சியின் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.