உக்ரைனுக்கு 5 பில்லியன் டாலர் நிதி உதவியை கனடா அறிவித்துள்ளது.
கனடிய பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை திங்கட்கிழமை (24) வெளியிட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட ரஷ்ய சொத்துக்களின் நிதியை பயன்படுத்தி இந்த உதவியை கனடா வழங்குகிறது.
உக்ரைனில் நடைபெறும் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர் பங்கேற்கிறார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது.
உக்ரைனின் அமைதி, பாதுகாப்பு குறித்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் 13 வெளிநாட்டுத் தலைவர்களில் Justin Trudeauவும் ஒருவராவார்.
உக்ரேனிய வரலாற்றை அழிக்கும் தங்கள் பேரரசை நிறைவேற்றும் ரஷ்யாவின் விருப்பம் காரணமாகவே இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது என அமைதி, பாதுகாப்பு குறித்த உச்சி மாநாட்டில் Justin Trudeau தெரிவித்தார்.
கனடாவின் மேலதிக உதவியாக உக்ரைனுக்கு 25 இலகுரக கவச வாகனங்கள் வழங்குவதாகவும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு உதவ மானியமும் வழங்குவதாகவும் Justin Trudeau உறுதியளித்தார்.