உக்ரைன் யுத்தம் குறித்து அமெரிக்க அதிபருடன் கனடிய பிரதமர் உரையாடினார்.
சனிக்கிழமை (22) இந்த உரையாடல் நிகழ்ந்ததாக கனடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (24) நடைபெறவுள்ள மெய்நிகர் G7 கூட்டத்துக்கு முன்னதாக இரு நாட்டு தலைவர்களும் உரையாடியுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முடிவுக்கு வரும் என இரு நாட்டின் தலைவர்களும் நம்புவதாக இந்த உரையாடலின் பின்னர் அமெரிக்கா ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பால் தூண்டப்பட்ட பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் உக்ரைனுக்கு இடம் அளிக்கப்பட வேண்டும் என கனடிய பிரதமர் Justin Trudeau அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.