Haida Gwaii முதற்குடி உரிமையை கனடிய மத்திய அரசு உறுதிப்படுத்தியது.
British Columbiaவின் வடக்கு பகுதியில் உள்ள Haida Gwaii தீவுக்கூட்டத்தின் முதற்குடி உரிமையை மத்திய அரசாங்கம் Haida முதற்குடி இனத்துடன் ஒரு வரலாற்று ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கிறது.
Haida முதற்குடி தேசத்தின் தலைவர் Gaagwiis Jason Alsop, பிரதமர் Justin Trudeau, சுதேச உறவுகள் அமைச்சர் கரி ஆனந்தசங்கரி ஆகியோர் இந்த நில ஒப்பந்தத்தில் திங்கட்கிழமை (17) கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தில் Haida Gwaiiயில் உள்ள நிலங்களுக்கு கனடாவின் பூர்வகுடி உரிமையை கனடிய அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
இது இருதரப்பு நல்லிணக்கத்திற்கான பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது என பிரதமர் தெரிவித்தார்.
Haida மக்களுக்கு அவர்களின் நிலத்தின் உள்ளார்ந்த சட்ட உரிமையை வழங்கும் இந்த நிகழ்வை வரலாறு படைக்கப்படும் ஒரு தருணம் என அமைச்சர் கரி ஆனந்தசங்கரி வர்ணித்தார்.
பேச்சுவார்த்தைகள் மூலம் பூர்வகுடி உரிமையை மத்திய அரசு அங்கீகரிப்பது இதுவே முதல் முறை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்த ஒரு “குறிப்பிடத்தக்க” சாதனை என தெரிவித்த கரி ஆனந்தசங்கரி, இது இரு தரப்பு உறவை “மிகவும் அர்த்தமுள்ள வழியில்” மீட்டமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.