Ontario மாகாண சபை தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரடி விவாதம் திங்கட்கிழமை (17) நடைபெறுகிறது.
Torontoவில் நடைபெறும் இந்தக் கட்சி தலைவர்கள் விவாதத்தில் Progressive Conservative கட்சி தலைவர் Doug Ford, Liberal கட்சி தலைவர் Bonnie Crombie, NDP தலைவர் Marit Stiles, பசுமை கட்சி தலைவர் Mike Schreiner ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தேர்தலுக்கு 10 நாட்கள் மாத்திரம் உள்ள நிலையில் இந்த விவாதம் நடைபெறுகிறது.
இது தேர்தலுக்கு முந்தைய இரண்டாவதும் இறுதி விவாதமாகும்.
முதலாவது தேர்தல் விவாதம் வடக்கு Ontarioவில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.
Ontario மாகாண சபை தேர்தல் வாக்களிப்பு February 27ஆம் திகதி நடைபெறுகிறது.