Ontarioவின் 44 வது மாகாண சபையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் February 27 ஆம் திகதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் வாக்களிக்க இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலம் உள்ளது.
இந்த நிலையில் Doug Ford தலைமையிலான Progressive Conservative கட்சி, கணக்கெடுப்புகளில் முன்னிலையில் உள்ளது.
ஆனால் Liberal கட்சிக்கான ஆதரவு 2022 மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக இருந்ததை விட இம்முறை அதிகமாக உள்ளது.
இறுதியாக முன்னெடுக்கப்பட்ட Nanos Research கருத்துக்கணிப்பில், 44.6 சதவீத வாக்காளர்கள் ஆதரவுடன் PC கட்சி முன்னிலை வகிக்கின்றது.
தொடர்ந்து Liberal கட்சி 29.8 சதவீத ஆதரவையும், NDP 18 சதவீத ஆதரவையும், பசுமைக் கட்சி 5.5 சதவீத ஆதரவையும் பெற்றுள்ளன.
Nanos Research கருத்துக்கணிப்பில் Doug Ford முதல்வர் பதவிக்கான தெரிவில் முதலிடத்தில் உள்ளார்.
39.9 சதவீதம் பேர் அவரை தமது தெரிவு வேட்பாளராக அடையாளம் காட்டியுள்ளனர்.
இந்தத் தெரிவில் Liberal கட்சி தலைவர் Bonnie Crombie 26.1 சதவீத ஆதரவையும், NDP கட்சி தலைவர் Marit Stiles 15. 7 சதவீத ஆதரவையும், பசுமை கட்சி தலைவர் Mike Shreiner 7.2 சதவீத ஆதரவையும் பெற்றுள்ளனர்.