Ontario மாகாணத்தில் நெடுஞ்சாலை 11 இல் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்தார், 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Orillia நகரில் இந்த விபத்து வெள்ளிக்கிழமை (07) காலை நிகழ்ந்தது.
நெடுஞ்சாலை 11 இல் பல வாகனங்கள் விபத்துக்கு உள்ளானதில், 49 வயதான ஒருவர் மரணமடைந்தார், மேலும் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என OPP தெரிவித்தது.
Orillia நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பனிப் பொலிவு எச்சரிக்கை அமுலில் இருந்த சமயம் இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் குறைந்தது 10 வாகனங்கள் சிக்கியுள்ளன.
பலியானவர் Brampton நகரை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.