அமெரிக்க மதுபான விற்பனையை நிறுத்த மூன்று கனடிய மாகாணங்கள் முடிவு செய்துள்ளன.
Ontario, British Columbia, Nova Scotia மாகாணங்கள் அரசுக்கு சொந்தமான கடைகளில் இருந்து அமெரிக்க மதுபானங்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளன.
கனடிய தயாரிப்புகள் மீது அமெரிக்கா கடுமையான வரிகளை விதித்த மறுநாள் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க மதுபான விற்பனையை செவ்வாய்க்கிழமை (04) முதல் ‘காலவரையின்றி நிறுத்த’ முடிவு செய்துள்ளதாக Ontario முதல்வர் Doug Ford ஞாயிற்றுக்கிழமை (02) அறிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும், LCBO 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க மதுபான பொருட்களை விற்பனை செய்வதாக Doug Ford கூறினார்.
இந்த நிலையில் அனைத்து அமெரிக்க மதுபானங்களும் செவ்வாய்க்கிழமை முதல் LCBO கடைகளில் இருந்து அகற்றப்படும் என அவர் கூறினார்.
965 மில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க மதுபானங்களை LCBO விற்பனை செய்கிறது.
LCBOவில் 3,600க்கும் மேற்பட்ட அமெரிக்க மதுபான தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.
British Columbia Nova Scotia மாகாணங்களும் அரசுக்கு சொந்தமான கடைகளில் இருந்து அமெரிக்க மதுபானங்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.