தேசியம்
செய்திகள்

அமெரிக்க வரிகளை தவிர்க்கலாம் என்பதில் ‘மிகவும் அவநம்பிக்கையுடன்’ உள்ளேன்: நிதியமைச்சர்

அமெரிக்காவின் வரி கட்டணங்களை செவ்வாய்க்கிழமைக்குள் (04) தவிர்க்கலாம் என்பதில் ‘மிகவும் அவநம்பிக்கையுடன்’ இருப்பதாக நிதியமைச்சர் Dominic LeBlanc ஞாயிற்றுக்கிழமை (02) தெரிவித்தார்.

கனடா இறக்குமதி செய்யும் பெரும்பாலான பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பின் மூலம் வர்த்தக போரை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஆரம்பித்தார்.

செவ்வாய்க்கிழமைக்கு முன்னதாக கனடியர்கள்  இந்த வரிகளிடமிருந்து தப்பிக்க வாய்ப்பில்லை என தான் நம்புவதாக Dominic LeBlanc  தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வர்த்தக செயலாளராக நியமனம் செய்யப்பட்டவரான Howard Lutnick உள்ளிட்டவர்களுடன் தனது உரையாடல்கள் இதை உறுதிப்படுத்தியதாக Dominic LeBlanc கூறினார்.

March மாதத்தில் இதில் மாறுதல் ஏற்படலாம் என கூறிய அமைச்சர், இவற்றில் பெரும்பாலானவை கணிக்க முடியாதவை எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதிக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Conservative கட்சியின் கொள்கை மாநாடு ஆரம்பம்!

Lankathas Pathmanathan

வேலை வெற்றிடங்கள் முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியது

Lankathas Pathmanathan

Pickering நகரில் வாகனம் ஏரியில் நுழைந்ததில் தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment