Pickering நகரில் நிகழ்ந்த வாகன விபத்தில் பலியான இரண்டு தமிழர்களின் இறுதி நிகழ்வுகள் வார விடுமுறையில் நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை (28) இரவு நிகழ்ந்த வாகன விபத்தில் தந்தையான 40 வயது பகீரதன் புஷ்பராஜா (கண்ணன்), அவரது மூன்று வயது மகள் பவானி (ரெயானா) பகீரதன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
இவர்களின் இறுதி நிகழ்வுகள் வார விடுமுறையில் நடைபெறுகிறது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை (01) பார்வைக்கு வைக்கப்படும் இவர்களது பூதவுடல், ஞாயிற்றுக்கிழமை (02) தகனம் செய்யப்படும்.
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி – தேசியம்
பலியான பகீரதன் புஷ்பராஜா இலங்கையில் நீர்வேலியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
இவர்கள் பலியான விபத்துகள் குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் காவல்துறையினரால் பதிவு செய்யப்படவில்லை.