கடுமையான எல்லை நடவடிக்கை மூலம் கனடா அமெரிக்க வரிகளை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் வர்த்தக அமைச்சுக்கு ஜனாதிபதி Donald Trump தேர்வு செய்துள்ள Howard Lutnick இந்த கருத்தை தெரிவித்தார்.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களுக்கு இந்த வார இறுதியில் இருந்து 25 சதவீத வரியை விதிக்க Donald Trump திட்டமிட்டுள்ளார் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் எல்லையில் எதிர்கொள்ளப்படும் அமெரிக்கா அரசின் சவால்களை கனடிய அரசாங்கம் நிவர்த்தி செய்தால் கனடா குறுகிய காலத்தில் வரி கட்டணங்களைத் தவிர்க்கலாம் என அவர் கூறினார்.
இலைதுளிர் காலத்தில் இரண்டாவது சுற்று வரிகளை விதிக்கும் சாத்தியக்கூறுடன் கூடிய ஒரு பரந்த சுங்க வரி திட்டத்தை Howard Lutnick விவரித்தார்.
இதில் முதல் சுற்று வரிகள் எல்லையுடன் பிணைக்கப்பட்டுள்ளது எனவும் தவிர்க்கப்படக்கூடியது எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு சட்டவிரோத குடியேற்றம் மற்றும் fentanyl குறித்த அமெரிக்காவின் கவலைகளை கனடா நிவர்த்தி செய்தல் அவசியம் என அவர் கூறினார்.
அமெரிக்காவின் நகர்வு ஒரு கட்டணமல்ல என தெரிவித்த அவர், இது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையின் ஒரு நடவடிக்கையாகும் எனவும் Howard Lutnick கூறினார்.