தேசியம்
செய்திகள்

Ontarioவின் அடுத்த முதல்வராகும் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் Marit Stiles!

Ontario மாகாணத்தின் அடுத்த முதல்வராகும் தனது பிரச்சாரத்தை NDP தலைவர் Marit Stiles ஆரம்பித்தார்.
Ontario மாகாண சபை தேர்தல் பிரச்சாரம்  புதன்கிழமை (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.
நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், வேட்பாளர்கள், மாகாணசபை உறுப்பினர்களுடன் இணைந்து Ontarioவின் அடுத்த முதல்வராகும் தனது பிரச்சாரத்தை Marit Stiles புதன் காலை Toronto நகரில் ஆரம்பித்தார்.
மூன்றாவது பதவிக் காலத்திற்கு Doug Ford தகுதியற்றவர் என இந்த பிரச்சார ஆரம்ப நிகழ்வில் தெரிவித்த Marit Stiles, மிகச் சிறந்த Ontarioவை தெரிவு செய்ய வேண்டிய நேரம் இது என வலியுறுத்தினார்.
எமது பொருளாதாரம் மற்றும் இறையாண்மைக்கு Donald Trump அச்சுறுத்தலாக மாறும் இந்த நேரத்தில் உங்கள் பக்கம் செயல்படும் ஒருவரை முதல்வராக்க வேண்டிய நேரம் இது என NDP தலைவர் தெரிவித்தார்.
Ontario மாகாண சபை தேர்தல் February 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts

குறைவான நன்கொடைகளை பெறும் உணவு வங்கிகள்

Lankathas Pathmanathan

ஒரு மாதத்தில் அதிக தொற்றுக்களை Ontario பதிவு செய்தது!

Gaya Raja

Naziகளுடன் இணைந்து போரிட்டவரை கெளரவித்ததற்கு ஆளுநர் நாயகம் அலுவலகம் மன்னிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment