Liberal கட்சியின் தலைமைத்துவப் போட்டியில் ஈடுபட Ottawa நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலைமைப் பதவிக்கு போட்டியிட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் Chandra Aryaவிடம் Liberal கட்சியின் தலைமை தெரியப்படுத்தியுள்ளது.
Chandra Arya இந்த தகவலை ஞாயிற்றுக்கிழமை (26) வெளியிட்டார்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய தலைமைக்கான தேடல் ஆரம்பித்தது.
Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில், தலைமை பதவிக்கான போட்டியில் ஈடுபடும் எண்ணத்தை நாடாளுமன்ற உறுப்பினரான Chandra Arya வெளியிட்டிருந்தார்.
ஆனாலும், தலைமை பதவிக்கான போட்டியில் ஈடுபட தான் அனுமதிக்கப்பட மாட்டார் என Liberal கட்சியின் தலைமை தன்னிடம் தெரிவித்ததாக Chandra Arya கூறினார்.
“கனடாவின் Liberal கட்சி தலைமைத்துவ போட்டியில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டேன் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது,” என Chandra Arya பதிவிட்டார்.
இந்த விடயத்தில் கட்சியிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்பதாகவும், “தனது அடுத்த நடவடிக்கைகளை கவனமாக பரிசீலித்து வருவதாகவும்” அவர் தெரிவித்தார்.
இந்த முடிவு தலைமைத்துவ போட்டியின் சட்டபூர்வமான தன்மை, கனடாவின் அடுத்த பிரதமரின் சட்டபூர்வமான தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது எனவும் அவர் கூறினார்.
Chandra Arya தொடர்ந்தும் கட்சி தலைமை வேட்பாளர் இல்லை என்பதை Liberal கட்சி தேசியத்திடம் ஞாயிறு இரவு உறுதிப்படுத்தியது.
தலைமைப் பதவிக்கான வேட்பாளர்கள் தமது பெயர்களை January 23 ஆம் திகதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்களை கட்சி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க பத்து நாட்கள் வரை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Chandra Arya கட்சியின் தலைமை பதவி போட்டியில் இருந்து விலத்தப்பட்ட நிலையில் ஆறு வேட்ப்பாளர்கள் தொடந்தும் Liberal தலைமைப் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
Chandra Arya போட்டியில் இருந்தது விலத்தப்பட்ட நிலையில், இதுவரை தமது பெயர்களை பதிவு செய்தவர்களின் எவரும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.