Ontario மாகாணத்தில் முன்கூட்டிய தேர்தலுக்கான அழைப்பு அடுத்த வாரம் விடுக்கப்படும் என்ற செய்தியை முதல்வர் Doug Ford உறுதிப்படுத்தினார்.
புதன்கிழமை (29) இந்த தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என்பதை வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Doug Ford உறுதிப்படுத்தினார்.
“நான் செவ்வாய்க்கிழமை (28) ஆளுநர் நாயகத்தை சந்திப்பேன்” என இந்த செய்தியாளர் சந்திப்பில் Doug Ford கூறினார்.
சனிக்கிழமை (25) நடைபெறும் முக்கிய Progressive Conservative கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் சந்திப்பில் முதல்வர் தனது முடிவின் காரணம் குறித்து கட்சி உறுப்பினர்களுக்கு விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியை கையாள்வதற்கு தனது அரசாங்கத்திற்கு புதிய ஆணை தேவை என Ontario முதல்வர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் Ontario மாகாணத்தில் முன்கூட்டியே தேர்தலை நடத்த முதல்வர் Doug Ford தயாராகி வருவதாக கடந்த சில வாரங்களாக செய்தி வெளியாகியது.
Ontarioவில் Progressive Conservative கட்சி கருத்துக் கணிப்புகளில் முன்னிலையில் உள்ள நிலையில் இந்த தேர்தல் குறித்த அறிவித்தல் வெளியாகவுள்ளது.
தற்போது Doug Ford பெரும்பான்மை அரசாங்கத்தை தலைமை தாங்குகிறார்.
Ontarioவில் அடுத்த மாகாணசபை தேர்தல் June 2026 நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.