தேசியம்
செய்திகள்

Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி

Pickering நகரில் நிகழ்ந்த வாகன விபத்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் சிக்கி வாகனத்திலிருந்து வெளியேறிய தந்தையும் அவரது மூன்று வயது மகளும் மற்றொரு வாகனத்தில் மோதி உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலியானவர்கள் Pickering நகரை சேர்ந்த 40 வயதான பகீரதன் புஸ்பராசா, அவரது புதல்வியான 4 வயதான ரியானா பகீரதன் என குடும்பத்தினர் அடையாளப் படுத்தியுள்ளனர்.
இதில் பலியான பகீரதன் புஸ்பராசா, தாயகத்தில் நீர்வேலியைச் சேர்ந்தவர என தெரியவருகிறது.
முதலில் இவர்கள் பயணித்த Honda வாகனம் Nissan வாகனத்துடன் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்துக்கு Honda வாகனம் காரணமாக இருக்கலாம் என ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்பவ இடத்தை விட்டு Honda வாகனம் 350 metre பயணத்தை தொடர்ந்தது.
அங்கு ஒரு வீதி தடுப்பில் மோதிய Honda வாகனம் சாலையை விட்டு விலகி ஒரு பள்ளத்தில் விழுந்துள்ளது.
இதில் வாகனத்தை விட்டு இறங்கிய தந்தை, மகளை தூக்கிக் கொண்டு விதியின் மறுமுனைக்கு செல்ல முயற்சித்த போது, அவர்கள் இருவரும் BMW வாகனத்தால் மோதப்பட்டாதாக தெரிவிக்கப்படுகிறது.
Honda வாகன ஓட்டுநர் முதலாவது விபத்தின் பின்னர் சம்பவ இடத்தில் தரித்து நிற்காததால், இது ஓர் hit-and-run என்ற வகையில் விசாரிக்கப்படுகிறது.
இரண்டாவது விபத்து நிகழ்ந்த சாலை மங்கலான வெளிச்சம் கொண்டது எனவும் இது இந்த விபத்துக்கான காரணியாக இருக்கலாம் எனவும் காவல்துறையினரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிவித்தனர்.
இதில் Nissan வாகன சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
BMW வாகன சாரதிக்கும் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் சம்பவ இடத்தில் அவசர உதவி பிரிவினரால் மதிப்பீடு செய்யப்பட்டார்.
இந்த விபத்துகள் குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் காவல்துறையினரால் பதிவு செய்யப்படவில்லை.

Related posts

Uyghur இஸ்லாமியர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் ; உலகின் கவலைகளை சீனா கவனத்தில் எடுக்க வேண்டும் : கனடிய பிரதமர் வலியுறுத்தல்

Gaya Raja

கனடாவில் திங்கட்கிழமை 10 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய தொற்றுக்கள்!

Gaya Raja

கனடா: தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டியது!

Gaya Raja

Leave a Comment