கனடாவுக்கு அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் போரில் பதில் நடவடிக்கைக்கு பதிலாக இராஜதந்திர நகர்வுகளின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது.
Donald Trump முன்வைக்கும் வரி அச்சுறுத்தலுக்கு எதிரான நகர்வுகளை முன்னெடுக்க கனடாவுக்கு குறுகிய கால அவகாசம் உள்ளது என Alberta முதல்வர் Danielle Smith கூறினார்.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு February 1 முதல் வரி விதிக்கப்படும் என Donald Trump தெரிவித்துள்ளார்.
புதிய வர்த்தகத் தடைகளை எதிர்கொள்ளும் அபாயத்தைத் தடுக்க பதில் நடவடிக்கைகளை விட இராஜதந்திரமே சிறந்த வழி என அவர் கூறினார்.
இந்த வரிகளை அமெரிக்கா அறிவிப்பதற்கு முன்னர் அவற்றைத் தடுக்க அல்லது குறைக்க கனடா அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் எனவும் Danielle Smith தெரிவித்தார்.
அமெரிக்க தலைநகரில் ஒரு வாரம் தங்கியுள்ள Alberta முதல்வர், அங்கு பல்வேறு தரப்பினரிடம் சந்திப்புகளை முன்னெடுக்கிறார்.