Ontario மாகாணத்தில் முன்கூட்டியே தேர்தலை நடத்த முதல்வர் Doug Ford தயாராகி வருவதாக தெரிய வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதியை கையாள்வதற்கு தனது அரசாங்கத்திற்கு புதிய ஆணை தேவை என Ontario முதல்வர் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியின் நான்கு ஆண்டு பதவிக் காலம், அவரது அரசாங்கம் வாக்காளர்களிடம் தெளிவான ஆணையை கோர போதுமானதாக இருக்கும் என Doug Ford பரிந்துரைக்கிறார்.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு February 1 முதல் வரி விதிக்கப்படும் என Donald Trump தெரிவித்துள்ளார்.
இது போன்ற வரி விதிப்பு Ontarioவின் பொருளாதாரத்தில் 450,000 முதல் 500,000 வேலைகளை பாதிக்கும் எனவும் Doug Ford முன்னர் எச்சரித்திருந்தார்.
Ontarioவில் Progressive Conservative கட்சி கருத்துக் கணிப்புகளில் முன்னிலையில் உள்ளது.
NDP, Liberal, பசுமைக் கட்சியினர் அனைவரும் முன்கூட்டிய தேர்தலை நிராகரிக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு திடீர் தேர்தல் மாகாணத்தில் தேவையற்ற ஸ்திரமின்மையை உருவாக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.