அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள Donald Trumpக்கு கனடிய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump திங்கட்கிழமை (20) பதவி ஏற்றார்.
இதனை ஓட்டி வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில், கனடாவும் அமெரிக்காவும் உலகின் மிக வெற்றிகரமான பொருளாதார கூட்டாண்மையைக் கொண்டுள்ளன என கனடிய பிரதமர் Justin Trudeau குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள DonaldTrumpக்கு கனடிய அரசாங்கத்தின் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் அதிக வேலைவாய்ப்புகள், மேலதிக வளத்தை உருவாக்க மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என Justin Trudeau தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.
இந்த பரஸ்பர நன்மை பயக்கும் உறவை கனடா வலுப்படுத்தி வருவதாக கனடிய பிரதமர் தெரிவித்தார்.
எல்லை தாண்டிய வர்த்தகத்தை அதிகரிக்கவும், இரு நாடுகளின் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும், எல்லையின் இருபுறமும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பேரும் அளவில் முதலீடுகளைச் செய்து வருகிறோம் எனவும் Justin Trudeau கூறினார்.