Quebec மாகாணத்தில் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுகளை நான்கு தமிழர்கள் எதிர்கொள்கின்றனர்.
Dollard-des-Ormeaux நகரில் உள்ள ஒரே வீட்டில் சமீபத்திய வாரங்களில் நிகழ்ந்த தொடர்ச்சியான குற்றங்களை தொடர்ந்து இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Pincourt நகராட்சியை சேர்ந்த 35 வயதான சுகிர்தன் சிவநேசன், Île Bizard தீவை சேர்ந்த 40 வயதான மகிந்தன் சிவலிங்கம், Montréal நகரை சேர்ந்த 43 வயதான ஜெசிந்தன் சிவலிங்கம், Pierrefonds நகரை சேர்ந்த 37 வயதான ஜூலியன் அந்தோனி தெரான்சன் ஆகியோர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
வியாழக்கிழமை (17) Montreal நீதிமன்றத்தில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஒரு வீட்டை குறிவைத்து நிகழ்ந்த தொடர்ச்சியான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (18) வெளியான ஒரு அறிக்கையில் Montreal காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவங்களின் பின்னணியில் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த நால்வரில், ஜூலியன் அந்தோனி தெரான்சனுக்கு மட்டுமே குற்றப் பதிவு எதுவும் இல்லை என கூறப்படுகிறது.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.