தேசியம்
கட்டுரைகள் ராகவி புவிதாஸ்

தப்பினார் ஜனாதிபதி Trump!

கருத்தியல் ரீதியாக அமெரிக்காவை இரண்டாக பிரித்து வைத்திருந்த ஜனாதிபதி Donald Trumpபை பதவியிலிருந்து நீக்கும் ஜனநாயக கட்சியினரின் முயற்சி எதிர்பார்ப்பிற்கு அமைய தோல்வியில் முடிவடைந்தது.

அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியான Trumpபின் குடியரசு கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் Senate சபையில், அவருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் (Abuse of Power) மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருத்தல் (Obstruction of Justice) ஆகிய இரு குற்றச்சாட்டுகள் முறையே 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் தோல்வி அடைந்தது.

Senate சபையில் ஜனாதிபதி Trumpபின் கட்சியான குடியரசுக் கட்சி பெரும்பான்மை வகிப்பதால் இம்முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். ஏற்கனவே நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இந்த பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேறியிருந்தது. மொத்தம் 100 உறுப்பினர்களை கொண்ட Senate Senate சபையில், ஜனாதிபதி Trumpபின் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 47 உறுப்பினர்களும் உள்ளனர். ஜனாதிபதி பதவியில் இருந்து Trump நீக்கப்பட வேண்டுமெனில் குடியரசுக் கட்சியின் 20 உறுப்பினர்களாவது ஜனாதிபதி Trumpக்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும்.

முன்னாள் துணை ஜனாதிபதி Joe Biden மற்றும் அவரது மகனுக்கு எதிராக விசாரணைகளை முடக்கிவிடுமாறு Ukraineக்கு அழுத்தம் விடுத்தமை ஜனாதிபதி Trumpக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டமைக்கான முக்கிய காரணியாகும். மேலும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் ஜனநயாக கட்சியினரினால் ஜனாதிபதி Trump மீது சுமத்தப்பட்டன.

வழமையாக இதுபோன்ற நிலையில் பிரதிநிதிகள் மற்றும் Senate சபைகளின் உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி வாக்களிப்பது வழமை. ஆனால் இம்முறை நடந்தது அதுவல்ல. Senator Mitt Romney தவிர ஏனைய அனைவரும் கட்சி சார்பான நிலைப்பாட்டில் வாக்களித்திருந்தனர்.  இது ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் மூன்றாவது பதவி நீக்க குற்றச்சாட்டு வழக்காகும்  அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது முறையாக ஜனாதிபதி ஒருவரை பதவியிலிருந்து நீக்கும் முயற்சி தோல்வி கண்டுள்ளது.

 ஜனாதிபதி Trump மீது சாட்டப்பட்ட இரண்டில் ஒரு குற்றம் நிரூபிக்கப் பட்டிருந்தாலும் அவர் தனது பதவியை இழந்திருப்பார். எதிர்வரும் November மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடுவதன் மூலம், பதவி நீக்க நடவடிக்கைக்கு உட்பட்டு அதன் பின்னர்  மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக Trump  உருவெடுத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த வாக்களிப்புகள்  தெரிவு செய்யப்பட்ட கட்சி சார் உறுப்பினர்களின் முடிவாகும். ஜனாதிபதி Trump மீதான குற்றச்சாட்டுகள் குறித்த அமெரிக்க வாக்காளர்களின் நிலைப்பாடு என்ன என்பதை November மாதம் 3ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எடுத்தியம்பும்.

 ராகவி புவிதாஸ்

Related posts

பெருந் தொற்று நேரத்திலும் பசிபோக்கும் FYFB உணவு வங்கி!

Gaya Raja

கனடாவில் அவசர காலச் சட்டம்: “இது தகுமோ.. முறையோ.. தர்மம் தானோ…?”

Lankathas Pathmanathan

பாகம் 2 – 2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!