கனடாவின் முதலாவது முதல் குடியின பிரதமராகும் எண்ணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் Jaime Battiste முன்வைத்துள்ளார்.
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் ஈடுபடும் தனது எண்ணத்தை Mi’kmaw நாடாளுமன்ற உறுப்பினர் Jaime Battiste அறிவித்தார்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
இதில் தலைமைப் பதவிக்கான போட்டியில் ஈடுபடும் தனது எண்ணத்தை Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் அறிவித்தார்.
பிரதமர் பதவிக்கு போட்டியிடும் தனக்கு முதல்குடி தலைவர்களிடமிருந்தும் பிற கனடியர்களிடமிருந்தும் ஆதரவு’ கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் Mi’kmaw உறுப்பினர் இவராவார்.
Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.
Liberal கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9 தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.