Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் ஈடுபடும் தனது எண்ணத்தை முன்னாள் துணை பிரதமர் Chrystia Freeland அறிவித்தார்.
அமைச்சரவையில் இருந்து விலகிய ஒரு மாதத்தின் பின்னர், முன்னாள் நிதியமைச்சரும் துணைப் பிரதமருமான Chrystia Freeland பிரதமர் Justin Trudeauவின் பதவிக்கான தனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றார்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
இதில் பிரதான வேட்பாளர்களில் ஒருவராக கருதப்படும் Chrystia Freeland வெள்ளிக்கிழமை (17) தலைமைப் பதவிக்கான போட்டியில் ஈடுபடும் தனது எண்ணத்தை அறிவித்தார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) தனது பிரச்சாரத்தை அவர் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்.
Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.
Liberal கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9 தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.