பிரதமர் Justin Trudeau தலைமையிலான அமைச்சரவை சந்திப்பொன்று புதன்கிழமை (15) நடைபெறுகிறது.
மாகாண முதல்வர்களையும் பிரதமர் புதனன்று சந்திக்க உள்ளனர்.
பிரதமர் அலுவலகம் இந்த சந்திப்புகளை உறுதிப்படுத்தியது.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump விடுத்துள்ள வரி எச்சரிக்கை குறித்து உரையாடுவதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Donald Trump கனடாவில் இருந்து அமெரிக்கா செல்லும் அனைத்து இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை விதிக்க எச்சரித்து வருகின்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு வெற்றிகரமான கூட்டாண்மையை இது போன்ற எச்சரிக்கைகள் பாதிப்பதை எவரும் விரும்பவில்லை என கூறிய பிரதமர் Justin Trudeau, தேவை ஏற்படின் ஒரு வலுவான பதில் நடவடிக்கைக்கு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
இந்த வரி விதிப்புக்கு எதிரான கனடிய அரசின் பதில் நடவடிக்கை குறித்த திட்டம் முதல்வர்களுடனான சந்திப்பில் விவாதிக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் Melanie Joly கூறினார்.
Donald Trump விடுத்துள்ள வரி எச்சரிக்கை குறித்து பேசுவதற்காக மத்திய நிதியமைச்சர் Dominic LeBlanc செவ்வாய்க்கிழமை (14) Ontario முதல்வரை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் மத்திய அரசின் எல்லைப் பாதுகாப்புக்கான திட்டத்தை தான் பார்வையிட்டதாக முதல்வர் Doug Ford தெரிவித்தார்.
இதனை ஒரு திடமான திட்டம் என அவர் வர்ணித்தார்.
இந்த வரி கட்டணங்களால் ஏற்படக்கூடிய வேலை இழப்புகளை மாதிரியாகக் கொண்டு நிதித் துறையும் கனடாவின் முக்கிய வங்கிகளும் செயல்பட்டு வருவதாக Dominic LeBlanc கூறினார்.
இந்த வரிவிதிப்பால் Ontario மாகாணத்தில் மாத்திரம் 500,000 வேலை இழப்புகள் சாத்திரம் என முதல்வர் Doug Ford மதிப்பிட்டுள்ளார்.