Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என அமைச்சர் François-Philippe Champagne அறிவித்தார்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான சாத்தியமான வேட்பாளர்கள் பட்டியலில் அமைச்சர் François-Philippe Champagne பெயரும் அடங்கியிருந்தது.
ஆனாலும் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என்ற தனது முடிவை தொழில்துறை அமைச்சர் François-Philippe Champagne செவ்வாய்க்கிழமை (14) அறிவித்தார்.
கனடாவைப் பாதுகாக்க, கனடியர்களைப் பாதுகாக்க, கனடிய வணிகங்களைப் பாதுகாக்க தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக அவர் கூறினார்.
Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ள நிலையில் அவரது இந்த அறிவித்தல் வெளியானது.