தேசியம்
செய்திகள்

சொந்த மகனை கடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டும் தந்தை

சிறுவர் கடத்தல் தொடர்பில் தந்தை ஒருவர் Toronto காவல்துறையினரால் தேடப்படுகிறார்.

சொந்த மகனை கடத்திய குற்றச்சாட்டில் 48 வயதான தந்தை Toronto காவல்துறையினரால் தேடப்படுகிறார்.

தனது மூன்று வயது சிறுவனை (Valentino) இவர் இந்தியாவிற்கு கடத்திச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

48 வயதான Kapil Sunak என்பவர் இந்த கடத்தல் குற்றச்சாட்டில் தேடப்படுகிறார்.

இவர் தனது 3 வயதான மகனை கடந்த வருடம் இந்தியாவிற்கு அழைத்து சென்றுள்ளார்.

July மாதம் இந்தியா சென்ற தந்தையும் மகனும் August மாத ஆரம்பத்தில் மீண்டும் கனடா திரும்ப நீதிமன்ற உத்தரவு இருந்தது.

ஆனாலும் தந்தை மகனை மீண்டும் கனடாவுக்கு அழைத்து வராத நிலையில் அவர் மீது கடத்தல் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் காவல்துறையினரால் தேடப்படும் தனது முன்னாள் கணவரை இந்தியாவில் இருந்து தமது மகனை கனடாவுக்கு அழைத்து வருமாறு அந்த சிறுவனின் தாயார் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

Ontarioவிலே COVID தொற்றின் புதிய திரிபின் பரவலை தடுக்க மூன்று வார பூட்டுதல் தேவை: Ontario அறிவியல் அட்டவணை!

Gaya Raja

கனேடிய நாடாளுமன்றத்தின் இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை நிராகரிக்கும் இலங்கை

Ontarioவில் 4,800க்கும் அதிகமான தொற்றுகள் வெள்ளிக்கிழமை பதிவு!

Gaya Raja

Leave a Comment